நிர்மலா சீதாராமன் சிக்ஸர்.. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்பு.. வருகிறது கனிம காரிடார்!
டெல்லி: தமிழ்நாட்டில் மினரல் காரிடார் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டு உள்ளார். தாது பொருட்கள் மற்றும் பல்வேறு கனிமங்கள் கொண்ட மாநிலங்களில் இதற்கான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அமைக்கப்படும்.
அதன்படி தமிழ்நாடு, கேரளா , ஆந்திர பிரதேசம், ஒடிசாவில் மினரல் காரிடார் அமைக்கப்படும். அதாவது கனிமவள மையம் அமைக்கப்படும். அரியவகை கனிமங்களை எடுக்க இந்த மையம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டு உள்ளார்.
மத்திய பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது . புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும்

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள் . அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் . பல்வேறு நோய்களுக்கன மருந்தகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது, என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கனிம வழித்தடம் (Mineral Corridor) என்றால் என்ன?
பொதுவாக 'கனிம வழித்தடம்' என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கனிம வளங்களை முறையாகத் தோண்டி எடுத்து, அவற்றைச் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பு (Integrated Infrastructure) ஆகும்.
சுரங்கங்கள் (Mining Hubs): கனிமங்கள் எடுக்கப்படும் இடங்கள்.
சுத்திகரிப்பு ஆலைகள் (Processing Units): பூமியில் இருந்து எடுக்கப்படும் தாதுக்களைப் பிரித்தெடுத்து சுத்தமான கனிமங்களாக மாற்றும் தொழிற்சாலைகள்.
ஆராய்ச்சி மையங்கள் (R&D Centers): கனிமங்களின் தரம் மற்றும் புதிய பயன்பாடுகளைக் கண்டறியும் இடங்கள்.
சரக்கு போக்குவரத்து (Logistics): கனிமங்களை உற்பத்தி மையங்களுக்கு (உதாரணமாக பேட்டரி அல்லது செமி-கண்டக்டர் ஆலைகள்) விரைவாகக் கொண்டு செல்லும் சிறப்புப் பாதைகள்.
தமிழகத்திற்கு ஏன் இந்த அறிவிப்பு?
தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடற்கரை ஓரங்களில் உள்ள மணலில் (Beach Placer Sands) மோனசைட் (Monazite) போன்ற அபூர்வ கனிமங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.
இந்த வழித்தடத்தின் முக்கிய நோக்கம்:
இறக்குமதி குறைப்பு: தற்போது செமி-கண்டக்டர்கள், மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை சாதனங்களுக்குத் தேவையான அபூர்வ கனிமங்களுக்கு (Rare Earth Elements) நாம் சீனாவை அதிகம் நம்பியுள்ளோம். அதைத் தவிர்க்க இந்த வழித்தடம் உதவும்.
வேலைவாய்ப்பு: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனிமச் சுத்திகரிப்பு ஆலைகள் அமைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சி: செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் தமிழகத்திலேயே சுத்திகரிக்கப்படும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications