நாடு முழுக்க 42 லட்சம்.. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு.. மத்திய அரசு அனுப்பிய முக்கிய மெசேஜ்
சென்னை: நாடு முழுக்க உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆன்லைன் வழியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு CGHS அட்டை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்திற்கான (சிஜிஹெச்எஸ்) பங்களிப்பு செலுத்தும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

CGHS கார்டு என்றால் என்ன?: மத்திய அரசின் சுகாதாரத் (சிஜிஹெச்எஸ்) திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு மையம் சார்பாக மருத்துவ சேவை வழங்கப்படும். இந்தியா முழுவதிலும் உள்ள 80 நகரங்களில் சுமார் 42 லட்சம் பயனாளிகள் CGHS-ன் கீழ் உள்ளனர்.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, "தற்போது பணியில் உள்ள செய்யும் ஊழியர்கள் தற்காலிக reference எண்ணை உருவாக்க ஆன்லைனில் (www.cghs.nic.in) புதிய CGHS கார்டுக்கு கட்டாயமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு, அவர்கள் அதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் முறையாக கையொப்பமிடப்பட்ட மற்றும் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட கடின நகலை, தற்போது பணிபுரியும் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு CGHS அட்டைகள் வழங்கப்படும்.
ஓய்வு பெற்றவர்கள்; ஓய்வு பெற்றவர்கள் அதற்காக உள்ள துறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
CGHS, விண்ணப்பதாரர் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை ஆய்வு செய்யும், இதில் ஊதிய அளவு மற்றும் CGHS விலக்கு, ஆதார் அட்டை, PAN அட்டை அல்லது வேறு ஏதேனும் செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஆகியவை அடங்கும்.
ஊழியர்கள்: இது போக இன்னொரு அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் ஜிஐஎஸ் விலக்குகளை நிறுத்தியுள்ளது. அதாவது ஜிஐஎஸ் பிடித்தம் இனி செய்யப்படாது. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து இத்தனை காலம் பிடிக்கப்பட்ட குரூப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு இனி பணம் பிடிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர் குழுக் காப்பீட்டுத் திட்டம் (CGEGIS) ஜனவரி 1982 இல் நடைமுறைக்கு வந்தது. இது அரசு ஊழியர்களுக்கு இரண்டு நன்மைகளை வழங்குகிறது: அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கான காப்பீட்டுத் தொகை மற்றும் ஓய்வு பெறும்போது மொத்தத் தொகை செலுத்துதல்.
இப்போது இதற்கான பிடித்தம் நிறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான EPFO ஆணை இரண்டு விஷயங்களைக் கூறி உள்ளது.
செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு EPFO இல் சேர்ந்த ஊழியர்களுக்கு GIS இன் கீழ் விலக்குகள் நிறுத்தப்படும். இதுவரை செய்யப்பட்ட கழிவுகள் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். 01.09.2013 க்குப் பிறகு EPFO இல் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து எங்கு செய்யப்பட்டாலும் GIS இன் கீழ் உள்ள கழிவுகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று EPFO சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications