உங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கா? மத்திய அரசு சொன்ன மிக முக்கிய அறிவுரை.. இதை ஃபாலோ பண்ணுங்க
சென்னை; நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 2994 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.
இதன் மூலம் இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 16,354 தொட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,30,876 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா
தற்போது ஏற்படும் கொரோனா காரணமாக யாரும் மரணம் அடையவில்லை. தற்போது மிகவும் லேசான கொரோனாவே மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சின் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை.

அறிகுறிகள்
இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு, சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சமீபத்தில் நாடு முழுக்க ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மக்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா
இந்த காய்ச்சலுக்கு இடையில் தற்போது மக்களுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 என்ற அளவில் உள்ளது. XBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ்கள் சமீபத்தில் உலகம் முழுக்க பல நாடுகளில் பரவியது. முக்கியமாக சீனாவில் பரவியது. ஆனால் இந்தியாவில் அப்போது பரவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது. நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.

ஆன்டிபயாடிக்
இந்த கொரோனா காரணமாக சிலர் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். கொரோனா போகவில்லை என்று பலர் ஆண்டிபயாடிக் எடுக்கிறார்கள். ஆனால் இப்போது எடுத்தால் அந்த ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு உடல் ஏற்றதாக மாறிவிடும். வரும் நாட்களில் எதாவது வைரஸ் அல்லாத மற்ற பாக்ட்ரியா பாதுகாப்பு, எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால், அப்போது ஆண்டிபயாடிக் பயன்படுத்தினால் கேட்காது. உதாரணமாக உடலில் சிறுநீரக குழாய் தொற்று எல்லாம் ஏற்படும் பட்சத்தில் ஆண்டிபயாடிக் எடுத்தால் அப்போது அதன் பவர் கம்மியாக இருக்கும். இதனால் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம், என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. மிக மிக மோசமா நிலையை உடல் அடையாத பட்சத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுக்க கூடாது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications