அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்தி.. ஸ்டன் ஆகப் போறாங்க! அரசு போடப்போகும் சூப்பர் உத்தரவு
சென்னை: பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை சில மாற்றங்களுடன் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள். புதிய பென்சன் திட்டத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
வாக்குறுதிகள் நிறைவேற்றம்: இதில் முக்கியமான வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டம் ஆகும். ஆனால் இதை இன்னும் தமிழ்நாடு அரசு கொண்டு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
புதிய பென்சன்: இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
மார்க்கெட் லிங்க் பென்சன்: இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். இந்த வருடம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி பெற முடியாமல் ஏற்பட்ட தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை கையில் எடுக்க நினைக்கும் நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது .
வேறுபாடு என்ன? : தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
புதிய ரூல் : இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications