A to Z.. முக்கிய கண்டிஷன்.. சென்னை பறந்த "அமுதா".. ஜார்ஜ் கோட்டைக்கு டெல்லி அனுப்பிய பளீர் மெசேஜ்?!
சென்னை: நீட் தேர்வில் இருந்து எப்படியாவது விலக்கு பெறலாம் என்று தமிழ்நாடு அரசு முயன்று கொண்டு இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு இது தொடர்பாக முக்கிய மெசேஜ் ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ளது என்கிறார்கள்.
Recommended Video
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக ஒரு பக்கம் முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவிலும் அரசு உள்ளது.
இன்னொரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்கு எதிராக தமிழ்நாடு பாஜக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கிலும் தமிழ்நாடு அரசு சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறது.

எப்படி
முன்னதாக பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போதும் கூட நீட் தேர்வு விலக்கு குறித்து கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டின் மிக முக்கிய கோரிக்கை இதுதான். நீட் தேர்வு விலக்கு கொண்டு வர ஒன்றிய அரசு ஆதரவு தர வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்து. மோடியிடம் பல முறை இந்த கோரிக்கையை சந்திப்பின் போது வைத்தேன் என்று முதல்வரே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால்
ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதில் நேரடியாக கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு நீட் விலக்கு குறித்து எந்த கிரீன் சிக்னலும் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. நீட் விலக்கு கொடுக்க வேண்டுமென்றால் சில விஷயங்களில் நீங்கள் எங்களுக்கு ஆதரவாக செல்ல வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தரப்பு தமிழ்நாடு திமுக அரசிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

அமுதா
அதன்படி ராஜ்யசபாவில் எங்களுக்கு பலம் குறைந்து வருகிறது. நிறைய கூட்டணி கட்சிகள் இப்போது ஆதரவு தரவில்லை. சிவசேனா ஆதரவும் இல்லை. அதிமுகவும் 3 எம்பிக்களை ராஜ்யசபாவில் இழந்துவிட்டது. ஆனால் ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக்களை நீங்கள் ஆதரித்தால் நாங்கள் நீட் விலக்கை பெற்றுத்தருவோம் என்று தமிழ்நாடு திமுக அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிஷன் போட்டதாக தெரிகிறது.

மசோதா
சில மசோதாக்களை நிறைவேற்ற நீங்கள் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் நாங்கள் நீட் தேர்வு விலக்கில் கிரீன் சிக்னல் கொடுப்போம் என்று பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக இருக்கும் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி அமுதா தமிழ்நாடு வந்து பேசிவிட்டு சென்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன. ஒன்றிய அரசின் கண்டிஷன்களை இவர் ஜார்ஜ் கோட்டையில் தெரிவித்துவிட்டு போனதாக கூறப்படுகிறது,.

ஆனால்
ஆனால் இவரின் வருகைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசின் பணிகளை கவனிக்கவே அவர் வந்தார். தமிழர் என்பதை மரியாதையை நிமித்தமாக ஜார்ஜ் கோட்டை சென்றார் என்றும் கூறப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க ஒன்றிய அரசின் கண்டிஷன் எதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஒன்றிய அரசின் துறைமுக மசோதாவை முதல் ஆளாக எதிர்த்ததே முதல்வர் ஸ்டாலின்தான்.

கடிதம்
அதோடு பல்வேறு மாநில முதல்வர்களும் இவர் கடிதம் எழுதினார். விவசாய சட்டம், சிஏஏ என்ஆர்சி சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது மத்திய அரசின் மசோதாக்களை திமுக கண்டிப்பாக ஆதரிக்காது என்கிறார்கள். இந்த கட்டுப்பாட்டிற்கு எல்லாம் திமுக மசியாது என்கிறார்கள்.

ஒன்றிய அரசு
இதனால்தான் நீட் தேர்வு விலக்கிற்கு எதிராக தமிழ்நாடு பாஜக களமிறங்கி உள்ளது என்கிறார்கள். ஒன்றிய அரசின் கண்டிஷன்களை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இதையடுத்து சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவாக களமிறங்கியது என்றும் கூறுகிறார்கள். .
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications