சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533 கோடி செலவு செய்த பாஜக.. தமிழுக்கு இவ்வளவு தானா.. ஆர்டிஐ மூலமாக அம்பலம்!
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா உள்ளிட்ட செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமைகளை பேசி வருவதாக பாஜகவினர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533.59 கோடி செலவு செய்யப்பட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருத வளர்ச்சி ரூ.230.24 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.

அதேபோல் மற்ற 5 இந்திய செம்மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு ரூ.13.41 கோடி செலவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதன்பின் 2005ஆம் ஆண்டு சமஸ்கிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சமஸ்கிருதத்தை விடவும் 22 மடங்கு தமிழுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கன்னடம், ஒடியா, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு 2008 முதல் 2014 வரை செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இந்த 4 மொழிகளுக்கும் மொத்தமாக சேர்த்து ரூ.34.08 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் 5 செம்மொழிகளுக்கும் சேர்த்து ரூ.147 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 5 மொழிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு ரூ.2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி என்று பதிவிட்டுள்ளார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications