சென்னையிலிருந்து புதுவை வந்தார் அமைச்சர் அமித்ஷா.. ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி வரவேற்பு
புதுவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையிலிருந்து புதுவை சென்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
Recommended Video
பீகாரில் ஒரு சில நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை வந்தார் அமித்ஷா. அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவடிக்கு சென்றார். அப்போது வழிநெடுகிலும் தமிழக பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷா வருகையையொட்டி மீனம்பாக்கம் முதல் ஆவடி வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆவடி
பின்னர் அவர் ஆவடி மத்திய ரிசர்வ் படையினர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இன்று காலை ஹெலிகாப்டரில் புதுவை சென்றார். புதுவையில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு காலை 10.15 மணிக்கு வந்த அமித்ஷாவுக்கு துணை நிலை ஆளுநர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றார்கள்.

மகாகவி பாரதியார் இல்லம்
தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்துகிறார். 11 மணிக்கு புதுவையில் மத்திய பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

கம்பன் கலையரங்கம்
மதியம் 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். மேலும் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ 70 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பாஜக தலைமை அலுவலகம்
பின்னர் 3.45 மணிக்கு புதுவை பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துக் கொண்டு சென்னைக்கு விமானம் மூலம் செல்கிறார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications