தமிழக தேர்தல் களத்தில் பியூஸ் கோயல்.. டெல்லி பாஜகவின் ஸ்பெஷல் மூவ்.. பலே மாஸ்டர் பிளான்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்க, சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது பாஜக தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்திருக்கிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பொறுப்பாளராகவும், மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொகல் ஆகியோரை தேர்தல் இணை பொறுப்பாளர்களாகவும் பாஜக தலைமை நியமித்துள்ளது.
தமிழகத்திற்கு பியூஸ் கோயல் புதியவர் கிடையாது. ஏற்கெனவே முரளிதர ராவ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து இவர் தமிழகத்திற்கான பொறுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பொறுப்பாளராக நியமிக்கப்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.

கூட்டணிக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில் பாஜக வெற்றிப்பெற வேண்டும் எனில், இரண்டு தளங்களில் இருந்து வேலை பார்க்க வேண்டும். ஒன்று அதிமுகவை ஒருங்கிணைப்பது. மற்றொன்று திமுகவை பலவீனப்படுத்துவது. இதில் முதல் விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வெண்டியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தலைமைக்கு முழு அதிகாரம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனவே கூட்டணி இறுதி வடிவத்தை எட்டுவதில் பிரச்சனை இருக்கிறது.
கட்சி தலைமையின் பிளான்
தற்போது அதிமுக கூட்டணியை விட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தனியாக பிரிந்து இருக்கிறார்கள். அதிலும் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் நான் நிச்சயம் கூட்டணிக்கே வரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது சமீபத்தில் நடந்த திருப்பரங்குன்றம் சலசலப்பில், அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பாஜகவுக்கே எதிரானவையாக இருந்தது. எனவே இவர்களையெல்லாம் மீண்டும் ஒன்று சேர்க்காவிட்டால் நிச்சம் பலத்த அடி வாங்குவோம் என்பதை பாஜக தலைமை உணர்ந்திருக்கிறது.
முழுமையடையாத கூட்டணி
இதற்காக ஏற்கெனவே பாஜக தலைமை பைஜயந்த் பாண்டாவை களமிறக்கியிருந்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்திருந்தார். அதேபோல ராமதாஸை மருத்துவமனையிலே நேரில் சென்று சந்தித்திருந்தார். இருப்பினும் கூட்டணி முழுமையடையவில்லை.
களமிறக்கிய தலைமை
இப்படி இருக்கையில்தான் பியூஸ் கோயல் களமிறக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் அவர் கோவா உட்பட பல மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கூட்டணியை இறுதி செய்வதில் இவர் பெயர் எடுத்தவர் என்பதால்தான் இந்த நியமனம் நடந்திருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில், ஜெயலலிதாவுக்கு பிந்தைய அதிமுக-பாஜக கூட்டணியை ஷேப் செய்ததில் முக்கியமானவராக கோயல் இருந்திருக்கிறார். மட்டுமல்லாது அதிமுகவின் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் கடந்த காலங்களில் பல முறை மீட்டிங் போட்டவர். இதையெல்லாம் அறிந்துதான் பாஜக தலைமை இவரை இறக்கியிருக்கிறது.
டிச.24 முக்கிய முடிவு
எம்ஜிஆர் நினைவு நாளான டிச.24ம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். எனவே ஜனவரிக்குள் கூட்டணியை இறுதி வடிவத்திற்கு கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. ஜனவரியை தாண்டினால் அதன் பின்னர் கூட்டணி உருவாக்கப்பட்டாலும், அது வலுவானது என்கிற தோற்றத்தை மக்கள் கொண்டு செல்ல முடியாது.
திமுகவை எதிர்கொள்வது
மறுபுறம் திமுகவை எதிர்கொள்ள முக்கிய தலைகள் தேவை. பாஜகவின் நோக்கம் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான். ஆனால், காங்கிரஸ் தலைமை வகிக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸுக்கு முதுகெலும்பாக திமுக இருக்கிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி, ஓட்டு திருட்டு பிரச்சாரத்தை உயர்த்தி பிடிப்பது என பாஜகவுக்கு, திமுக மிகுந்த சவலானதாக இருக்கிறது. எனவே தமிழகத்திற்கு உள்ளே நெருக்கடியை கொடுத்து, திமுகவை முடக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. எனவேதான் தேர்தல் பொறுப்பாளராக 3 மத்திய அமைச்சர்களை பாஜக நியமித்திருக்கிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு












Click it and Unblock the Notifications