மாமியாரின் பெருந்தன்மை.. வெட்டிய மருமகனை மன்னித்து.. கசிந்த ஈரம்.. கோர்ட் அதிரடி.. பூரிப்பில் சேலம்
மாமியார் மன்னித்ததால் மருமகனை கோர்ட் விடுதலை செய்துள்ளது
சென்னை: மாமியார் மன்னித்ததால், மருமகனின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி... இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி அந்த பயங்கர சம்பவம் நடந்தது.
குடும்பத்தில் நிறைய கடன் இவர்களுக்கு இருந்துள்ளது.. அன்றைய தினம் கடனை திரும்ப செலுத்துவது தொடர்பாக, தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாமியார்
அப்போது மகளுக்கு பரிந்துரை செய்து, மாமியார் பேசியதாக தெரிகிறது.. இதனால், உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணி, அங்கிருந்த அரிவாள்மனை எடுத்து, மாமியாரை வெட்டி விட்டார்.. இதில், ரத்தம் கொட்டி, பலத்த காயம் அடைந்த மாமியார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... இதுகுறித்து தகவலறிந்ததும், ஆத்தூர் போலீசார் விரைந்து சென்று சிவசுப்பிரமணியை கைது செய்தனர். அத்துடன் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

மாமியார் பதிலடி
இந்த வழக்கை சேலம் மகளிர் கோர்ட்டும் விசாரித்தது.. இறுதியில், மாமியாரை அரிவாளால் வெட்டிய சிவசுப்பிரமணிக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி கடந்த மே மாதம் 25-ந்தேதி தீர்ப்பு அளித்தது... இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் சிவசுப்பிரமணி அப்பீல் செய்தார்.. நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. அபபோது, தன்னுடைய மாமியாருடன் சமரசம் ஆகிவிட்டதாக சிவசுப்பிரமணியம் தரப்பில் எடுத்து சொல்லப்பட்டது.

அரிவாள்மனை
இதையடுத்து கடந்த 18-ந்தேதி சிவசுப்பிரமணியனின் மனைவி, 3 மகள்கள், மற்றும் மாமியார் ஒன்றாக ஆஜரானார்கள்.. அப்போது மாமியார் சொல்லும்போது "என்னுடைய மகள் மருமகனுடன் சேர்ந்து வாழ வேண்டும்.. 3 குழந்தைகளையும் இவர்கள் சேர்ந்து வளர்க்க வேண்டும்... அதனால் என்னை அரிவாளால் வெட்டிய மருமகனை மன்னித்து விட்டேன்... எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டது... மருமகனை தயவுசெய்து விடுதலை செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.. அத்துடன் இது சம்பந்தமான மனுவையும் மாமியார் தாக்கல் செய்தார்.

ஜோஷி கேஸ்
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி உடனடியாக தீர்ப்பையும் வழங்கினார்.. அதில், "கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதில் உயர்நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று அரியானாவை சேர்ந்த ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. எனவே, தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் உயர் நீதிமன்றம் குடும்ப பிரச்னையில் அதிகாரத்தை பயன்படுத்தலாம். இந்த வழக்கை பொறுத்தவரை, கொலை முயற்சி மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாமியார் மன்னிப்பு
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குற்றம் நடந்துள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். அவர்கள் கருத்து வேறுபாட்டையும் மறந்து விட்டனர். எனவே, உயர்நீதிமன்றத்திற்கு தரப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்கிறேன், அவரை விடுதலை செய்கிறேன்" என்றார். மாமியாரின் பெருந்தன்மையால் மருமகனின் தவறு மன்னிக்கப்பட்டுள்ளது.. அத்துடன், விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையும் ரத்தானது, இவர்களின் குடும்பத்தில் மட்டுமல்லாது அந்த பகுதி முழுக்க மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications