தமிழ்நாடு அமைச்சர்களை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக துபாய் தமிழ் சங்க தலைவர்.. பல்வேறு கோரிக்கை!
சென்னை: ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் துபாயின் தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் தமிழ்நாடு மாநில அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
ஐக்கிய அரபு அமீரக துபாய் தமிழ் சங்கமானது துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஒன்றினைக்கும் விதமாகவும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இந்த தமிழ் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகள், பணிகளை மேற்கொண்டு கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வந்த ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் துபாயின் தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் பல்வேறு தமிழ்நாடு அமைச்சர்களை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் குறிப்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், உலகத்தமிழர் நல்வாழ்வு துறை அமைச்சர் மஸ்தான், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அமைச்சர்களுடனான சந்திப்பு பற்றி அவர் நம்மிடம் கூறியதாவது, உலகத்தமிழர்களுக்கான நலன்கள் குறித்தும் அவர்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆலோசனை செய்தோம். வெளிநாட்டு வாழ் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் பேசினோம்.
உலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அரசு உதவும் என்றும் அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கூறினர்.மேலும் அமைச்சர்களுடனான இந்த சந்திப்பு மனநிறைவை அளித்தது, என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் துபாயின் பொதுசெயலாளர் ஹேமாலட்சுமியும் உடன் இருந்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications