வேல்ஸ் பல்கலை பட்டமளிப்பு விழா: இயக்குநர் ஷங்கர், சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
சென்னை : சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் ஷங்கர், சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
சென்னை அடுத்த பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில், ஆண்டுதோறும் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, அறிவியல், தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 12 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழா, வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப, உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், வேந்தருமான முனைவர் ஐசரிகணேஷ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இவ்விழாவில் பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநரும், பேராசிரியருமான அஜித்குமார் மொஹந்திக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதேபோல், பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா மற்றும் திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திரைப்பட இயக்குநர் சங்கர், இந்திய கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ராடிசன் ப்ளு குழுமத் தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த கல்வியாண்டில் 68 பதக்கங்களும், 48 வெள்ளி, 43 வெங்கல பதக்கங்களும், 4011 இளநிலை பட்டங்களும், 583 முதுநிலை, 87 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும், 148 முனைவர் பட்டம் என 4829 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு உதவி தொகைதொகை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணை வேந்தரும், பேராசிரியருமான ஸ்ரீமன்நாராயணன், திட்டம் மற்றும் வளர்ச்சியின் இணை வேந்தர், பேராசிரியர் ஜோதி முருகன், கல்வி வளர்ச்சி இணை வேந்தர், முனைவர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் கல்வி குழுமத் துணைத் தலைவர் பிரித்தா கணேஷ், பதிவாளர் பேராசிரியர் சரவணன், ஆசிரிய பெருமக்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications