அன் லிமிடெட் மட்டன் பிரியாணி -சிக்கன் 65! திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு தடபுடல் அசைவ விருந்து!
சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, ஸ்வீட்ஸ், என கடந்த 2 நாட்களாக தடபுடல் அசைவ விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி அமைப்பளர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை சந்தித்த அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் Disinformation மற்றும் Misinformation பற்றி பேசினார். அதுமட்டுமல்ல திமுக ஐடி விங் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

தன்னார்வலர்கள் கூட்டம்: அதைத் தொடர்ந்து சென்னையில் இன்று 2வது நாளாக நடைபெற்ற, சோஷியல் மீடியாவில் தீவிரமாக செயல்படும் திமுக ஆதரவு தன்னார்வலர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். தி.மு.க.காரர்களை பொறுத்தவரை கரை வேட்டி கட்டியவர்கள் - கட்டாதவர்கள் என்று வகையிலும் இருக்கிறார்கள் என்று பேசிய அவர் இன்னும் சில ஆலோசனைகளை வழங்கிவிட்டுச் சென்றார்.
அன் லிமிடெட் மட்டன் பிரியாணி: அதன் பின்னர் நடைபெற்ற மதிய விருந்தில் அன் லிமிடெட் பஃப்பே முறையில் மட்டன் பிரியாணி, கேட்கக் கேட்க எவ்வளவு வேண்டுமானாலும் சிக்கன் 65, கூடவே ஸ்வீட்ஸ் என அமர்களமாக அசைவ விருந்துக் கொடுத்து அசத்தியிருந்தார் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா. நேற்றும் இன்றும் இரண்டு நாட்களுமே மட்டன், சிக்கன், என வகைவகையாக அசைவ விருந்து கொடுத்திருக்கிறார்.
பரிசுப் பொருட்கள்: வெறுமனே மதிய விருந்தோடு திமுக ஐடி விங் நிர்வாகிகளை அனுப்பி வைக்க மனமில்லாமல் குடை, ஸ்டீல் வாட்டர் பாட்டில், டிராவல் பேக், புத்தகங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்களையும் நிர்வாகிகளுக்கு கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் டி.ஆர்.பி. ராஜா. இதனால் 2 நாள் திமுக ஐடி விங் 2.0 கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உற்சாகமாக ஊர் திரும்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications