அன்லாக் 1.. மத்திய அரசின் அனுமதி.. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுமா?
சென்னை: மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதித்துள்ள நிலையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுக்க ஊரடங்கில் முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. லாக்டவுன் 5.0க்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி வரை கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து அனுமதி
இந்த நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதித்துள்ளது. மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே மக்கள் செல்ல எந்த விதமான தடையும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு இ- பாஸ் அல்லது வேறு விதமான அனுமதிகளை பெற வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், மாநில அரசுகள் இதில் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
மாநிலங்களுக்கு இடையில் மக்கள் பயணம் செய்வது தொடர்பான வழிமுறைகளை அந்த மாநில அரசுகளே வெளியிடலாம் என்று மத்திய அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளாவில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தனியார் பேருந்துகள்
முக்கியமாக தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் செல்லுமா என்றும் மக்கள் கேட்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் பேருந்துகளை இருக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பேருந்துகள் சர்வீஸ் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தனியார் ஆம்னி பேருந்துகள் புக்கிங் தொடங்கி நடந்து வருகிறது.

முடிவு எடுக்கும்
இதில் தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது தமிழக அரசே பிற மாநிலங்களுக்கு போக்குவரத்தை தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம். இதனால் சென்னை தவிர தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் இருந்து பிற மாநிலத்திற்கு பேருந்து பயணம் தொடங்க வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை நீக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications