I LOVE TAMILNADU.. சொல்றது யாரு தெரியுதா? உபி போலீசால் துன்புறுத்தப்பட்ட மருத்துவர் கபீல் கான்
சென்னை: குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக்கொடுத்து உயிர்களை காப்பாற்றியதற்காகவும், யோகி அரசை விமர்சிக்கக்கூடாது என்பதற்காகவும் தன்னை நிர்வாணப்படுத்தி உணவு தராமல் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ள மருத்துவர் கபீல் கான், தமிழ்நாட்டில் வெறுப்புணர்வு இல்லை என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்சிஜன் பற்றக்குறை காரணமாக 63 குழந்தைகள் உட்பட 80 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் கபீல் கான் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைத்து பல உயிர்களை காப்பாற்றினார். இல்லாவிட்டால் மேலும் பல குழந்தைகள் உயிரிழந்து இருக்கும்.

ஆனால், அதன் பிறகு மொத்த பழியும் கபீல் கான் மீதே விழுந்தது. இந்த விஷயத்தில் அரசின் அலட்சியப்போக்கை விமர்சித்த காரணத்தால் கபீல் கான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை கைது செய்து உத்தரப்பிரதேச போலீஸ் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது. இந்த வழக்குகளில் இருந்து கபீல் கான் விடுவிக்கப்பட்டாலும் உபி அரசு பல்வேறு துன்புறுத்தல்களை வழங்கியது. தொடர்ந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து உபி சிறையில் அடைத்து துன்புறுத்தப்பட்டார்.
பல நாள் சிறைவாசத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட கபீல் கான் தற்போது சென்னையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கோரக்பூர் குழந்தை மரணத்தை தொடர்ந்து தனக்கு நேர்ந்த அநீதி குறித்து கபீல் கான், "The Gorakhpur Hospital Tragedy: புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த நிலையில் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தை அண்மையில் அவர் வெளியிட்டார்.
அந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கஃபீல் கான், "குழந்தைகள் உயிர்களை காப்பாற்றியதற்காக யோகி அரசால் பல வகைகளில் துன்புறுத்தப்பட்டேன். 5 நாட்கள் சிறையில் உணவும், குடிநீரும் தராமல் போலீஸ் துன்புறுத்தியது. பசியில் புற்களை பிடுங்கி தின்றேன். என்னை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கினார்கள். யோகி அரசு பற்றி தவறாக பேசக்கூடாது என்று மிரட்டினார்கள்.

தற்போது நான் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மக்கள் என்னை இஸ்லாமியராக பார்க்கவில்லை. குழந்தைகள் நல மருத்துவராக மட்டுமே பார்க்கின்றனர். இங்கு இருக்கும் மக்களிடம் எந்த வெறுப்பு உணர்ச்சியும் இல்லை. இங்கு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக உள்ளன. பொதுத்தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவரால் மருத்துவராக முடியாது. நீட்டில் 20% எடுத்தவரால் மருத்துவராக முடியும் என்பது அநீதி இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் தமிழ்நாட்டை விரும்புகிறேன். இது அனைவரையும் உள்ளடக்குகிறது. இங்கு பன்முகத்தன்மை உள்ளது. இங்கு மனிதகுலத்தின் மீதான அன்பும் பாசமும் உள்ளது. இங்குள்ள ஆட்சியில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி உள்ளது. நீங்கள் எதை உடுத்த விரும்புகிறீர்கள், யாரை வணங்குகிறீர்கள், எதை உண்கிறீர்கள், யாரை விரும்புகிறீர்கள் என்பதை அனைவரும் மதிக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications