முதல்ல ரூ.25 ஆயிரம்.. அப்புறம் ரூ.1 லட்சம்.. கடைசியா உரிமம் ரத்து.. பிளாஸ்டிக் பயன்படுத்தினா அபராதம்
சென்னை:தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம்,பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

சோதனையில் பறிமுதல்
பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து... பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.

தாக்கலான மசோதா
இந்நிலையில் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 ஆயிரம் முதல் அபராதம்
அதில் இடம்பெற்றுள்ள மற்ற விவரங்கள் வருமாறு: முதல் முறை ரூ.25 ஆயிரம், 2வது முறை ரூ.50 ஆயிரம், 3வது முறையாக பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

ரூ.1 லட்சம் அபராதம்
பிளாஸ்டிக் சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை, பகிர்ந்தளித்தால் ரூ. 1 லட்சம் வர அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி 4வது முறை பயன்படுத்தினால் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும். வணிக வளாகம், துணிக்கடை, பல்பொருள் அங்காடிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மளிகை வியாபாரிகளுக்கு அபராதம்
மளிகைக் கடைகள், மருந்துக்கடைகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1000 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும். சிறிய வணிக விற்பனையாளர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications