நாடு முழுவதும் GPay, Phonepe, Paytm சேவை பாதிப்பு.. பணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி!
டெல்லி: நாடு முழுவதும் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட முக்கிய யுபிஐ செயலிகள் சரிவர இயங்கவில்லை.
இது தொடர்பாக ஏராளமான பயனர்கள் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யுபிஐ செயலி வேலை செய்யவில்லை என்றும், இதனால் கடைகளில் பணம் செலுத்த முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வந்தனர்.

இன்று இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்த இந்த பிரச்சனை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. பெரும்பாலும், பணம் செலுத்தும்போது சிக்கல் எழுவதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
HDFC வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளின் UPI சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயனர்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் டிஜிட்டல் கட்டண பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இது நான்காவது பெரிய யுபிஐ சேவை செயலிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது பரவலாகப் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவை குறித்து மக்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications