பெரும் பாய்ச்சல்.. ரேஷன் கடைகளில் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்.. வந்தது செம வசதி.. இதை பாருங்க!
சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறை சேவைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பல துறைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஏற்கனவே ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்கும் நடைமுறை உள்ளது.

அதாவது கைரேகை வைத்து ரேஷன் அட்டை அடையாளம் மூலம் பணம் செலுத்தும் முறை உள்ளது. இல்லாதபட்சத்தில் கண் கருவிழி வழியாக அடையாளம் உறுதி செய்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் நடைமுறையும் உள்ளது. இப்படி டிஜிட்டல் முறையில் பொருட்களை ரேஷனில் வாங்க முடியும்.
ஒரு காலத்தில் ரேஷனில் பொருட்களை வாங்குவதற்கு வெறும் அட்டையை வைத்துக்கொண்டு லைனில் இருந்த காலம் எல்லாம் சென்றுவிட்டது. இப்போது எளிதாக ரேஷனில் பொருட்களை வாங்க முடியும். இந்த நிலையில் ரேஷனில் பொருட்களை வாங்கும் முறையை மேலும் எளிமையாக்கும் விதமாக தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முன்பே தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி மக்கள் எளிதாக பேடிஎம் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்த முடியும்.
உங்களிடம் பேடிஎம் இல்லை என்றாலும் வேறு யுபிஐ வழியாகவும் பணம் செலுத்த முடியும். இந்த பணம் நேரடியாக அரசுக்கு சென்று சேரும். அதனால் மக்கள் பணம் அரசுக்கு சென்று சேர்வதோடு மக்களும் எளிதாக பணத்தை செலுத்த முடியும். மேலும் இதன் மூலம் சில்லறை முறைகேடுகள் பல தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு சார்ந்த துறைகள் பலவும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. அதன்படி பொது மக்கள் செலுத்தும் அனைத்து விதமான வரிகளும் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் போன் மூலம் யுபிஐ வைத்து பணம் செலுத்த முடியும். இப்போது கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.
அதை வைத்து பணம் செலுத்த முடியும். இல்லையென்றால் டெபிட் கார்ட் மூலமாகவும் பணத்தை இனி கிராம பஞ்சாயத்துகளில் செலுத்த முடியும். இந்த புதிய முறை மூலம் நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இதன் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் பணம் பஞ்சாயத்து அளவில் திருடப்படாமல் நேரடியாக அரசின் கஜானாவிற்கு செல்லும். இதனால் பஞ்சாயத்துகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications