Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு.. அடித்த லக்.. ஜிஎஸ்டி எல்லாம் கிடையாது! சிறு கடைகளுக்கு வருது சலுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ₹2,000க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.

நிதி அமைச்சகம் ₹2,000க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை (GST) விதிக்கப் போவதாக பரவிய ஊகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். ஜூலை 22 அன்று மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளிக்கும் போது, "₹2,000க்கு மேல் உள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு GST விதிப்பது குறித்து GST கவுன்சிலிடமிருந்து எந்தப் பரிந்துரையும் வரவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

UPI

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு GST வரி

GST விகிதங்கள் மற்றும் விலக்குகள் GST கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகவும், இது மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பு என்றும் அவர் விளக்கினார்.

மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டு இலக்குகளை எட்டுவதே நோக்கம் என்றும் சௌத்ரி கூறினார். 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக, சுமார் ₹15.69 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆணையத்தின் மானியங்கள், மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் மூலதனச் செலவினங்களுக்கான மாநிலங்களுக்குக் கடனாக வழங்கப்படும் சிறப்பு உதவிகள் மூலம் மாநிலங்களின் நிதிக்கு மத்திய அரசு ஆதரவளிப்பதாக அவர் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அபராதம் ஜிஎஸ்டி

2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில், மாநிலங்களுக்கு மொத்தமாக ₹25.01 லட்சம் கோடி வளங்கள் மாற்றப்படுவதாகவும், இதில் வரிகளில் மாநிலப் பங்கு, மானியங்கள்/கடன் மற்றும் மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகைகள் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

அதேபோல் யுபிஐ பரிவர்த்தனைத் தரவுகளின் அடிப்படையில் வரி நோட்டீஸ்களை பெற்ற சிறு வியாபாரிகளுக்கு வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும் என மத்திய வரிகள் ஆணையர் கோத்ரஸ்வாமி எம். தெரிவித்துள்ளார்.

சிறுகுறு கடைக்காரர்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்கும். எனவே, இதை அரசியல் பிரச்சினையாக்குவது தேவையற்றது, என்று அவர் தெரிவித்து உள்ளார்.

யுபிஐ ஜிஎஸ்டி விலக்கு

ஏற்கனவே சிறு வணிக நிறுவனங்களுக்கு கடுமையாக ஜிஎஸ்டி விதிப்பது தவறாக முடியலாம் என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகளைக் கடந்த நிலையில், இந்த நடவடிக்கைகள் சிறு வணிகங்களை மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனை பொருளாதாரத்திற்குத் தள்ளக்கூடும், ஆன்லைன் பரிவர்த்தனைகள், குறிப்பாக யுபிஐ மூலம் கிடைத்த முன்னேற்றத்தை இது பாதிக்கும் என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய கர்நாடக நடவடிக்கைளை சுட்டிக்காட்டி, ஜிஎஸ்டி முறையின் கீழ் மேற்கொள்ளப்படும் தீவிர வரி விதிப்பு நடவடிக்கைகளை எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை விமர்சித்துள்ளது. பெங்களூரில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் பலருக்கு, யுபிஐ பரிவர்த்தனைகள் போன்ற டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் அதிகப்படியான வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பொருளாதார நடவடிக்கைகளை துல்லியமாக கணக்கிட்டு வரி ஏய்ப்பை குறைக்கும் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் கவனத்துடன் கையாளப்பட வேண்டும். அதிகப்படியான கண்காணிப்பு சிறு வணிகங்களை முறைசாரா ரொக்கப் பரிவர்த்தனை பொருளாதாரத்திற்குத் தள்ளி, ஒழுங்குபடுத்தும் நோக்கத்தையே தகர்க்கும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+