கையில் காசு இல்லாவிட்டாலும்.. சென்னை மாநகர பேருந்துகளில் முதல் முறையாக வந்தது சூப்பர் வசதி
சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி சோதனை அடிப்படையில் பல்லாவரம் பேருந்து பணிமனையில் இயங்கும் பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. இதன் மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணிகள் கட்டணத்தை செலுத்த முடியும்.
சென்னை மாநகரத்தில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் ஓடுகின்றன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் பெரும்பாலானோர் பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் சென்னை அரசு பேருந்துகளை பொறுத்தவரை இன்னும் பல படிநிலைகளில் முன்னேற்றம் நடக்க வேண்டியுள்ளது.

அனைவரும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு பல்வேறு வசதிகளை அதிகரிக்க வேண்டி உள்ளது. ஏசி பேருந்துகளை அதிகரிப்பது, சில வழித்தடங்களில் அதிக பேருந்துகளை இயக்குவது, பேருந்து நிலையங்களில் கழிவறை வசதிகள் போன்றவை முக்கியமாக உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.
இந்நிலையில் யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. யுபிஐ சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு சோதனை அடிப்படையில் சென்னையில் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதாவது, முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை மாநகர போக்குவரத்துக்கழகம் வழங்கி இருக்கிறது.
கிளாம்பாக்கம் வரை இல்லை.. நாளை முதல் சென்னை மக்களுக்கு நல்ல செய்தி.. இனி ரொம்ப ஈஸி
தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தி உள்ளது. அதன் வெற்றி, பயன்பாடு, நிறை- குறைகளை கருத்தில் கொண்டு சென்னையிலுள்ள மற்ற பணிமனைகளுக்கும் இக்கருவிகள் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications