யுபிஐ பரிவர்த்தனையில் அசத்தல் தீர்வு: தவறுதலாக அனுப்பிய பணத்தை எப்படி திரும்ப பெறலாம்?
சென்னை: இன்றைக்கு யுபிஐ அவசியமாகிவிட்டது, ஏனெனில் பணம் அனுப்பவும் பெறவும் வங்கி செல்லாமல் உடனடியாக மொபைல் மூலமே செய்ய முடிகிறது. சிறிய செலவுகளிலிருந்து பெரிய பரிவர்த்தனை வரை எளிதாகிறது... அதுமட்டுமல்ல, பாதுகாப்பு, டைம் மிச்சப்படுத்துதல் போன்றவற்றுக்கும் யுபிஐ அதிகம் பயன்படுத்தப்படுகிறது.. சிலசமயம் தவறுதலாக யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டால் அதனை திரும்ப பெற முடியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இன்றைய காலத்தில் பணம் அனுப்புவதற்கு வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. செல்போன் இருந்தாலே போதும். கூகுள் பே, போன் பே, ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன.

யுபிஐ அவசியம்
டீக்கடையில் டீ வாங்குவதிலிருந்து, வீட்டு வாடகை, கடன் தவணை, முதலீடு வரை எல்லாமே யுபிஐ மூலமே நடக்கிறது. ஆனால் இந்த எளிமை சில நேரங்களில் பெரிய பிரச்சனையையும் உண்டாக்குகிறது.
குறிப்பாக அவசரத்தில் பணம் அனுப்பும் போது, தவறான செல்போன் எண், தவறான யுபிஐ ஐடி அல்லது ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக டைப் செய்துவிட்டால், 100 ரூபாய் 1000 ரூபாய் ஆகி விடும். இப்படி தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வது? அந்த பணத்தை திரும்ப பெற முடியுமா? என்பதையே இங்கே எளிய வார்த்தையில் பார்க்கலாம்.
முதலில் ஒரு முக்கிய விஷயம்
UPI மூலம் ஒருமுறை பணம் அனுப்பிவிட்டால், அதை உடனடியாக "reverse" செய்ய முடியாது. பணம் நேரடியாக எதிர் நபரின் வங்கி கணக்கிற்கே போய்விடும். அதனால் தான் பணம் அனுப்பும் முன், யுபிஐ ஐடி, செல்போன் எண், பெயர் போன்றவற்றை 2 முறை சரிபார்ப்பது மிகவும் அவசியம்... QR கோடு ஸ்கேன் செய்யும் போதும், காட்டப்படும் பெயரை ஒருமுறை உறுதி செய்து கொள்வது நல்லது.
எதிர்பாராத விதமாக தவறு நடந்துவிட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பணம் சென்ற நபரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.. தவறுதலாக பணம் அனுப்பியதாக மரியாதையாக விளக்கி, பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம். பெரும்பாலானவர்கள் புரிந்து கொண்டு பணத்தை திருப்பி அனுப்புவார்கள்.
ஆப்ஷன்கள் இவைதான்
ஒருவேளை அவர் பணம் தர மறுத்தாலோ, தொடர்பு கொள்ள முடியவில்லையோ என்றால், அடுத்த கட்டமாக யுபிஐ செயலியில் புகார் அளிக்கலாம். நீங்கள் எந்த ஆப்பில் பணம் அனுப்பினீர்களோ அதாவது கூகுள் பே, Pay, போன்-பே, Paytm, ஜி-பே போன்றவை), அதில் அந்த transaction-ஐ தேர்வு செய்ய வேண்டும்..
அதில் "Get Help", "Having an issue", "Report a problem" போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதில் தவறான நம்பருக்கு பணம் அனுப்பியதாக தெரிவித்து புகார் அளிக்கலாம். சில செயலிகளில் call அல்லது chat மூலம் customer care-யை தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.
இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், நேரடியாக உங்கள் வங்கியை அணுகலாம். நீங்கள் எந்த வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பினீர்களோ, அந்த வங்கியில் நேரில் சென்று அல்லது ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம்.
அசத்தல் தீர்வு
அப்படி புகார் அளிக்கும் போது, யுபிஐ Transaction ID, பணம் அனுப்பிய தேதி, நேரம், தவறாக அனுப்பிய செல்போன் எண் / UPI ஐடி, உங்கள் பேங்க் அக்கவுண்ட் போன்ற விவரங்கள் என அனைத்தையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். வங்கி உங்கள் புகாரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.
வங்கி மற்றும் UPI செயலி இரண்டிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், கடைசியாக NPCI (தேசிய பணப்பட்டுவாடா கழகம்)-யின் customer care portal-ல் புகார் அளிக்கலாம். www.npci.org.in என்ற இணையதளத்தில் transaction விவரங்களை பதிவு செய்து நிவாரணம் கோர முடியும்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications