UPSC Jobs: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆகணுமா? வந்தாச்சு அறிவிப்பு.. 933 பணியிடங்கள்.. யுபிஎஸ்சி அப்டேட்
சென்னை: யுபிஎஸ்சி (UPSC Jobs) எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது குறித்து விவரங்களை பார்க்கலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் லட்சியமாக இருக்கும். பள்ளி பருவத்திலேயே ஐஏஎஸ் கனவுடன் பல மாணவ - மாணவிகள் இருப்பதை பார்க்க முடியும்.

933 காலிப்பணியிடங்கள்
அதிகாரமிக்க பதவி, மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய முடியும் என்பதால், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது நாம் நாட்டில் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு முதன்மை லட்சியமாக உள்ளது. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான தேர்வை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பினை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 933 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* இந்திய ஆட்சிப் பணி(ஐஏஎஸ்)
* இந்திய வெளியுறவுப் பணி(ஐஎப்எஸ்)
* இந்தியக் காவல் பணி(ஐபிஎஸ்)
* இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குகள் சேவை, பிரிவு 'ஏ'
* இந்தியக் குடிமை கணக்குகள் சேவை, பிரிவு 'ஏ'
* இந்தியக் கூட்டுறவுச் சட்ட சேவை, பிரிவு 'ஏ'
* இந்தியப் பாதுகாப்பு கணக்குகள் சேவை, பிரிவு 'ஏ'
* இந்தியப் பாதுகாப்பு நிலச் சேவை, பிரிவு 'ஏ'
* இந்தியத் தகவல் சேவை, பிரிவு 'ஏ'
* இந்திய அஞ்சல் சேவை, பிரிவு 'ஏ'
* இந்திய இரயில்வே பாதுகாப்புப் படை சேவை, பிரிவு 'ஏ'
* இந்திய வருவாய்த் துறை சேவை (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பிரிவு 'ஏ'
* இந்திய வருவாய்த் துறை சேவை (வருமான வரி) பிரிவு 'ஏ'
* புதுச்சேரி குடிமைப் பணி, பிரிவு 'பி'
* புதுச்சேரி காவல் பணி, பிரிவு 'பி' என மொத்தம் 23 பதவிகளில் 933 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 24.02.2026- தேதிப்படி 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது 1994 ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு முன்போ, ஆகஸ்ட் 2005 க்கு பிறகோ பிறந்தவராக இருக்க கூடாது.
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் என தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
முதன்மை தேர்வு / மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும். தமிழகத்தில் முதன்மை தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், ஆகிய நகரங்களில் நடத்தப்படும். முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. https://upsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு 04.02.2026 தொடங்கும். விண்ணப்ப பதிவு கடைசி நாள்: -24.02.2026 ஆகும். தேர்வு நடைபெறும் நாள்; 25.05.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-26-Engl-040226.pdf
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications