ஐஏஎஸ், ஐபிஎஸ் காலிப்பணியிடங்கள்.. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் இன்று முதல் தொடங்கியது!
சென்னை: 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று அடுக்குகளை கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்டதைப்போல மூன்று அடுக்குகளாக நடத்தப்படும் இந்த தேர்வின், முதல் தேர்வான 'முதல்நிலை தேர்வு' கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 1,105 காலி இடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 12ம் தேதி வெளியாகியிருந்தது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு இன்று தொடங்குகிறது. இது 9 எழுத்துத்தேர்வுகளை உள்ளடக்கியதாகும். இன்று தொடங்கும் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் மாதம் இதற்கான முடிவுகள் வெளிவரும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டெல்லியில் நேர்காணல் தேர்வு நடைபெறும். தேர்வு குறித்த விரிவான விவரங்கள் https://upsc.gov.in/ எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications