UPSC தேர்வு முடிவுகள்.. அகில இந்திய அளவில் தமிழக மாணவி ராஜேஸ்வரி 2ஆம் இடம்! மற்றொரு மாணவர் 7வது இடம்
சென்னை: குடிமைப் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் 958 பேர் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி 2வது இடத்தையும் ராஜா மொகைதீன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார்
இந்தியாவில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான காலியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வுகள் அடிப்படையில் நிரப்பப்படும். அதன்படி கடந்த 2025ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வுகளின் இறுதி முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் இதில் தான் நிரப்பப்படும்.

கடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுக்க 958 பேர் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொது பிரிவில் இருந்து அதிகபட்சமாக 317 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து ஓபிசி பிரிவில் இருந்து 306 பேரும், எஸ்சி பிரிவில் இருந்து 158 பேரும், எஸ்டி பிரிவில் இருந்து 73 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் இந்தாண்டு இறுதி தேர்வாக நடத்தப்படும் நேர்காணல்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் 140 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 இடங்களுக்குள் தமிழ்நாடு மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ராஜேஸ்வரி என்ற மாணவி தேசியளவில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ராஜேஸ்வரி இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் துணை ஆட்சியராக வேலை செய்து வருகிறார். அவர் தான் யுபிஎஸ்சி தேர்விலும் அகில இந்திய அளவில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோல ராஜா மொகைதீன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் டாப் 10 இடங்களுக்குள் வந்ததே இல்லை. கடைசியாக 2015ல் சரண்டா அரி அகில இந்திய அளவில் 7வது பிடித்திருந்தார். அதன் பிறகு இப்போது தான் டாப் 10க்குள் தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications