பெரியார் பெயருக்கு பின்னால் ‘சாதி’.. யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் சர்ச்சை! அதிர்ந்துபோன தேர்வர்கள்!
சென்னை: மத்திய அரசின் UPSC தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின், சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக அறிவித்திருந்தார் பெரியார். ஆனால், யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்பு சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு - முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த 13ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. காலை 9.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி என இரண்டு தாள் தேர்வுகளாக நடைபெறுகிறது. இந்த தேர்வை, சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் உட்பட 24,364 பேர் எழுதுகின்றனர்.
இன்று காலை தொடங்கி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற ஒரு கேள்வியில், 'சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?' என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக அறிவித்திருந்தார் பெரியார். சாதி ஒழிப்புக்காக போராடிய ஈ.வெ.ராமசாமியின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications