யு.எஸ் விமானப்படை - கடம் வித்துவான் கிரிதர் உடுப்பா இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி.. அசத்தல் வீடியோ!
சென்னை: யுனைடெட் ஸ்டேட்ஸ் பசிபிக் விமானப்படை இசை குழுவினர் உலக புகழ் பெற்ற கடம் வித்துவான் கிரிதர் உடுப்பாவுடன் இணைந்து இசை அமைத்த மெய்நிகர் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று ஹவாயிலுள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் பசிபிக் விமானப்படை இசைக்குழு இந்தியாவின் மிகப் பழமைவாய்ந்த தாளக் கருவிகளில் ஒன்றான கடம் வாசிப்பதில் புகழ் பெற்ற இசை கலைஞர் கிரிதர் உடுப்பாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த இசை நிகழ்ச்சியின் மெய் நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க இந்திய ராணுவ கூட்டுறவையும், இரண்டு நாட்டு மக்கள் ஒருவருக்கு ஒருவர் உள்ள இணைப்பையும் அதிகப்படுத்தும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட "ஓபன் க்ளஸ்டர்கள்" பாடல் யுனைடெட் ஸ்டேட்ஸ் பசிபிக் விமானப்படை இசை குழுவின் சாக்சோஃபோன் கலைஞராகிய ஸ்டாஃப் சார்ஜென்ட் லூயிஸ் ரோசா இயற்றியது ஆகும். மேலும் இது இந்திய மற்றும் பியூட்டோரிகன் கலாச்சாரம் இணைத்த கூட்டு கலவை பாடல் ஆகும். கிதாரில் சீனியர் ஏர்மேன் கை ஜேம்ஸ், பாஸில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ டெட்ரா, மற்றும் தாளத்தில் தொழில்நுட்ப சார்ஜென்ட் வில்பிரடோ குரூஸ் ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று இசையமைத்தனர்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் பசிபிக் விமானப்படை பிரச்சார தலைமை தொழில்நுட்ப சார்ஜென்ட் வில்பிரடோ குரூஸ் இது தொடர்பாக பேசியதில், : "உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக இந்த இசை நிகழ்ச்சியை அடைய முடிந்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்; இதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்கமுடியாமல் கொரோனா தடுத்தாலும் இசையானது தொலைதூரம் கடந்து எல்லைகளுக்கு அப்பாலும் எல்லோரையும் இணைக்க கூடியது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எங்களுடைய நட்பு நாடுகள் இடையிலான உறவை இந்த இசை நிகழ்ச்சியால் வலிமையால் பலப்படுத்தியிருக்கிறோம். இந்த மெய்நிகர் காணொளியை உங்களுக்காக தயாரிக்கும்போது நாங்கள் மகிழ்ந்ததை போலவே நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்!"
இந்த தொலைதூர இசை இணைப்பை பற்றி வாத்திய கலைஞர் கிரிதர் உடுப்பா கூறியது: "அமெரிக்க விமானப்படை இசை குழு கலைஞர்கள் இயற்றிய இந்த புது பாடலை கேட்டு நான் மிக்க உற்சாகம் அடைந்தேன். இந்த பாடல் உலக இசையுடன் நன்றாக பொருந்தியுள்ளது."
யுனைடெட் ஸ்டேட்ஸ் பசிபிக் விமானப்படை இசைக்குழு: யுனைடெட் ஸ்டேட்ஸ் பசிபிக் விமானப்படை இசைக்குழு மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சமூக உறவுகளையும் இராணுவ செயல்களையும் நிறைவேற்றும் பலதரப்பட்ட இசை கலைஞர்களை கொண்ட ஒரு தொகுப்பாகும். வருடம் தோறும் இவர்கள் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கி தேசப்பற்றை வளர்த்துக் கொள்கின்றன; அதே நேரத்தில் பசிபிக் விமானப்படை மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் விமானப்படை சார்பாக இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துகின்றன.
கடம் கிரிதர் உடுப்பா: கிரிதர் உடுப்பா பெங்களூரை சேர்ந்த புகழ் பெற்ற இந்திய (கடம்) கலைஞர். முப்பது ஆண்டுகளாக உலகத்தில் உள்ள பல இசை கலைஞர்களுடன் இணைந்து 50 நாடுகளுக்கு மேலாக பயணம் மேற்கொண்டு அநேக விருதுகளையும் புகழாரங்களையும் பெற்றுள்ள அவர் ஒரு இசை மேதையாகவும் ஒரு இசையின் தூதுவராகவும் இருக்கிறார். நியூயார்க் நகரத்தின் கார்னகி ஹால், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான் எஃப். கென்னடி சென்டர் ஃபார் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ், மற்றும் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள வோர்தாம் மையம் உள்ளிட்ட உலகின் மிக மதிப்புமிக்க இடங்களில் அவர் கச்சேரி நிகழ்த்தியுள்ளார்.
இந்த காணொளியை காண பின்வரும் லிங்குகளை கிளிக் செய்யவும்
- YouTube: https://www.youtube.com/user/AmConGenChennai
- Twitter: https://twitter.com/USAndChennai
- Instagram: https://www.instagram.com/usconsulatechennai/
- Facebook: https://www.facebook.com/chennai.usconsulate
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications