கதறும் அமெரிக்க மக்கள்.. இந்தியாவை சீண்ட போய் சொந்த நாட்டையே வீழ்த்திய டிரம்ப்.. சரியும் அமெரிக்கா?
சென்னை: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பதிலடி வரிகள் காரணமாக சீனாவை விட அமெரிக்காதான் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மீது டிரம்ப் வரி போட காரணம்.. இந்தியா மீது வரி போட்டால் இந்தியா நிறுவன பொருட்களை, இந்திய உற்பத்திகளை அமெரிக்கர்கள் வாங்குவதை குறைப்பார்கள் என்ற எண்ணம்.
அதாவது இந்திய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்று மக்கள் வாங்க மாட்டார்கள் என்று டிரம்ப் நினைத்தார். இதையடுத்தே இந்தியா மீது டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நட்பு இருந்தாலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தக தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறைவாகவே உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
டிரம்ப் இந்தியா வரி
மேலும், இந்தியா தனது ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடமிருந்தே வாங்குகிறது. சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் எரிசக்தி வாடிக்கையாளர்களில் இந்தியாவும் முன்னணி வகிக்கிறது. உக்ரைனில் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் விரும்புகின்றன. ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும். இது மேற்கூறிய காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராதமாகும்., என்று டிரம்ப் இந்தியாவை கடுமையாக எச்சரித்து உள்ளார்.
அழியும் அமெரிக்கா பொருளாதாரம்
ஆனால் இந்த வரி விதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்கர்கள்தான். உதாரணமாக
1. இப்போது இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 25% வரை வரிகளை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்க விற்பனையாளர் ஒருவர் கப் அண்ட் சாஸர் ஒன்றை இறக்குமதி செய்தால்.. அதற்கு 25% வரி விதிக்கப்படும். ஆனால் இதை யார் கொடுப்பார்?
2. இந்தியர்கள் இதை கொடுக்க மாட்டார்கள்.. இந்திய நிறுவனம் கொடுக்காது. இந்த வரியை இறக்குமதி செய்பவர்தான் கொடுப்பார். அதாவது யார் இறக்குமதி செய்கிறார்களோ.. அமெரிக்காவை சேர்ந்த அவர்கள்தான் கூடுதல் வரி போடுவார்கள்.
3. இதற்காக ஏற்படும் செலவை சமாளிக்க அவர்கள் விலையை ஏற்றுவார்கள். அதாவது இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த செலவை ஏற்கும்.
4. அந்த விலையை கொடுக்க போவது அமெரிக்கர்கள்தான். அமெரிக்க மக்கள்தான்.
5. சில விவசாய பொருட்களின் விலையை ஏற்ற முடியாத பட்சத்தில்.. அதை இறக்குமதி செய்யும் விவசாயிகள்தான் சமாளிக்க வேண்டும். அவர்கள்தான் இழப்பை சந்திப்பார்கள்.
டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது. அங்கே பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது.
இந்தியா அமெரிக்கா மோதல்
இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானுடன் ஒரு புதிய வர்த்தக உடன்படிக்கையை அறிவித்தார். இந்தியப் பொருட்களின் மீது 25% வரி விதித்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்த டிரம்ப்.. பாகிஸ்தான் உடன் ஒப்பந்தம் செய்தது மட்டுமன்றி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் கூட தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உடன் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த ஒப்பந்தம் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை கூட்டாக ஆராய்ந்து மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இது கொண்டு வரக்கூடும் என்று டிரம்ப் அவரின் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்தார். அதாவது பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை எடுத்து அதை உலக நாடுகளுக்கு விற்க அமெரிக்கா உதவும்.. அந்த எண்ணெயை இந்தியா கூட வாங்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications