ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங்
சென்னை: உலக அரசியல் அரங்கில் தற்போது ஒலிக்கும் ஒற்றை கருத்து.. ஈரான் காய்நகர்த்தலில் முந்திக்கொண்டது என்பதுதான். ஈரான் போரில் வேகமாக வெற்றிபெற்று வருகிறது என்பதே அந்த கருத்துருவாக்கம்.
ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, வாஷிங்டனை ஈரான் திணறடிப்பதாகப் பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். டொனால்ட் ட்ரம்ப் ஒரு முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டார் என்பதுதான் இன்றைய பொதுவான பிம்பம்.

ஆனால், இந்த ஆய்வுகளில் ஒரு மிகப்பெரிய 'பிளைண்ட் ஸ்பாட்' (Blind Spot) இருப்பதாகத் தெரிகிறது.அதாவது பலரும் மிஸ் செய்யும் சில விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயங்கள்தான் போரின் முடிவை தீர்மானிக்கும் என்கிறார்கள். அதாவது போரில் இப்போது ஈரான் வெற்றிபெறுவது போல இருக்கலாம். ஆனால் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்கிறார்கள். என்னங்க சொல்றீங்க.. போரில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறுமா? என்றால் மாறும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
1. அசுர பலம் கொண்ட 'மிலிட்டரி மெஷின்'
ஈரான் வியூகங்களை வகுப்பதில் கில்லாடியாக இருக்கலாம். ஆனால், அமெரிக்கா என்பது ஒரு சாதாரண நாடு அல்ல; அது இந்த பூமியின் ஆகச்சிறந்த ராணுவ இயந்திரம். இந்த மோதலில் அமெரிக்கா ஒருபோதும் ராணுவ ரீதியாக வீழ்த்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.. அந்த அளவிற்கு வலிமை குறைந்த சக்தியாக அமெரிக்கா இல்லை. அவர்கள் நினைத்தால், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குப் போரைத் தீவிரப்படுத்தும் (Escalation) வல்லமை படைத்தவர்கள். இது ஒரு சமபலமற்றப் போர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
2. கணிக்க முடியாத 'ஓவல் ஆபீஸ்' நாயகன்
வெள்ளை மாளிகையில் அமர்ந்திருக்கும் மனிதர் டொனால்ட் ட்ரம்ப். இக்கட்டான சூழலில் பின்வாங்குவதை விட, அழுத்தங்களுக்குப் பதிலடியாக 'டபுள் டவுன்' (Double Down) செய்வதே இவரது பாணி. அதாவது அவர் தோல்வி அடைவது போல இருந்தால்.. அதை விட மோசமான தோல்வியை எதிர்க்கு கொடுக்க நினைப்பார். குறிப்பாக, "தோற்றுவிட்டோம்" அல்லது "விட்டுக் கொடுத்துவிட்டோம்" என்ற பிம்பத்தை அவர் மரணமளவிற்கும் வெறுப்பவர். ஈரான் தன்னை விஞ்சுகிறது என்ற எண்ணம் வலுக்கும்போது, ட்ரம்ப் இன்னும் அதிரடியான, கணிக்க முடியாத முடிவுகளை எடுக்க வாய்ப்பு அதிகம். ட்ரம்ப் அகராதியில் இல்லாத வார்த்தை தோல்வி என்று அவரே கூறி இருக்கிறார்.. ஈரானிடம் தோற்க கூடாது என்று டிரம்ப் எதை வேண்டுமானாலும் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.
3. 'இரண்டாம் முறை' அதிபர் - டிரம்ப் யோசனை
இது ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம். அவருக்கு அடுத்த தேர்தல் என்ற கவலை கிடையாது. வாக்காளர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லாத ஒரு அதிபர், வழக்கமான அரசியல் கணக்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டார். "உலகிற்கு ஒரு சேவை செய்கிறேன்" என்ற மனநிலையில் இருக்கும் ட்ரம்ப், வளைகுடா நாடுகளின் ஆதரவோடும், இஸ்ரேலின் நேரடிப் பங்களிப்போடும் இந்த ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தத் துடிக்கிறார்.
4. அந்த 'யுரேனியம்' இலக்கு
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் (Enriched Uranium) தான் ட்ரம்ப்பின் கண்ணில் இருக்கும் பிரதான இலக்கு. அந்தச் சேமிப்பை அழிக்காமல் அல்லது கைப்பற்றாமல் இந்தப் போரிலிருந்து வெளியேறுவதை அவர் தோல்வியாகவே கருதுவார்.
ஈரானின் ஹார்முஸ் நெருக்கடி வாஷிங்டனைச் சிந்திக்க வைத்திருப்பது உண்மைதான். ஆனால், "ஈரானின் கையே ஓங்கியிருக்கிறது" என்ற ஒருமித்த கருத்துதான் அடுத்த பெரிய ஆபத்தாக அமையக்கூடும். உலகின் சக்திவாய்ந்த ராணுவத்தின் தலைவர், ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காமல் வெளியேற மாட்டார் எனில், இந்த யுத்தம் இன்னும் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை நோக்கித்தான் நகர்கிறது.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்












Click it and Unblock the Notifications