ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை
நியூயார்க்: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் மேற்காசியப் பகுதியில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அமெரிக்க ராணுவம் பாராசூட் வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக கூறப்படுவது பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
ஈரானின் பொருளாதார நரம்பாக கருதப்படுவது இந்த கார்க் தீவுதான். அந்த நாட்டின் சுமார் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் இந்த தீவிலிருந்தே நடைபெறுகிறது. பல்வேறு எண்ணெய் களங்களில் இருந்து குழாய் வழியாக கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய், இந்த தீவில் சேமிக்கப்பட்டு பின்னர் பெரிய எண்ணெய் கப்பல்கள் மூலம் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த தீவு ஹோர்மூஸ் நீரிணை அருகே அமைந்துள்ளது. உலகளவில் எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான பாதையாக இந்த நீரிணை கருதப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் எந்த ராணுவ நடவடிக்கையும் நடந்தால் உலக எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அமெரிக்கா ஈரான் மோதல்
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ வலிமையை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அங்கு சுமார் 45 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சுமார் 20 போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் டிரிபொலி என்ற போர்க்கப்பல் சமீபத்தில் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தடைந்துள்ளது. இந்த கப்பலில் மட்டும் சுமார் 3,500 வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
யுஎஸ்எஸ் பாக்சர்
மேலும், யுஎஸ்எஸ் பாக்சர் என்ற மற்றொரு போர்க்கப்பலும் அடுத்த சில நாட்களில் அங்கு சேரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், அமெரிக்க பாராசூட் படையை சேர்ந்த சுமார் 3,000 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் வான்வழியாக பாராசூட் மூலம் தரையிறங்கி அதிதீவிர தாக்குதல்களில் ஈடுபடும் திறன் பெற்றவர்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ஒரு சதுர அடி வெறும் ரூ.4.5.. மொத்தம் 25 ஏக்கர்! சீமான் தன் மனைவிக்கு வாங்கிய சொத்து! இடிக்குதே!
- ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு
- ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே
- திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே
- கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல்
எண்ணெய் கப்பல்கள்
இதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடா வழியாக பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்குவது தொடர்பாக இரு நாடுகளும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், ஈரானின் எரிசக்தி நிலையங்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கார்க் தீவு
இதனால் அந்த பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுவதாவது, "கார்க் தீவு மீது எந்த வகையான தாக்குதலும் நடந்தால், அது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை நேரடியாக பாதிக்கும். இதன் தாக்கம் உலகளவில் எண்ணெய் விலை மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஏற்கனவே எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்த மாதிரியான ராணுவ நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடும்" என்கின்றனர்.
ஈரான் இறங்கி வருமா?
ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவை குறிவைத்து அமெரிக்கா நடவடிக்கை எடுக்கலாம் என்ற தகவல் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை எந்தை நோக்கி செல்கிறது? ஈரான் இறங்கி வருமா? அமெரிக்கா கார்க் தீவை கைப்பற்றுமா? என்பது தான் உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.
-
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்













Click it and Unblock the Notifications