Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரம் வந்துவிட்டது.. வரும் நாட்களில் தங்கம் விலையில்.. சுனாமியே ஏற்பட போகிறது.. டிரம்ப் பகீர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் காரணமாக உலக அளவில் தங்கம் விலை உயருமா? வெள்ளி விலை உயருமா என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் வெனிசுலா மீதான வான்வழித் தாக்குதல்கள், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் சிறைபிடிப்பு ஆகியவற்றால் எழுந்த புவிசார் அரசியல் பதட்டங்கள், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலையைப் பாதிக்கலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 3 சனிக்கிழமையன்று, வெனிசுலாவை கைப்பற்றியதாக அறிவித்தார். அங்கே பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று கூறியிருந்தார்.

Venezuela gold rate silver

இந்த நடவடிக்கைக்கு வெனிசுலாவின் முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா, கியூபா, ஈரான் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது இறையாண்மை மீறல் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய புவிசார் அரசியல் பதட்டங்கள் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வெனிசுலாவை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயரும்.. இதனால் அமெரிக்கா பலம் அடையும்.. இதன் காரணமாக தங்க மதிப்பு சரியும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது.

போர் பதற்றம்

இன்னொரு பக்கம் ஈரானில் உள்நாட்டு மோதல் நடக்கும். கடந்த சில வாரங்களாக ஈரானில் பல நகரங்களில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அதிருப்தி ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான நேரடி எதிர்ப்பாக மாறியுள்ளது. இப்போது அங்கே ஆட்சியே கவிழும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் ஈரானின் எல்லைகளைக் கடந்து, ஈரான் ஆதரிக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் பல நாடுகள் மற்றும் குழுக்களையும் பாதிக்கும்.

மக்கள் அதிக பணவீக்கம், வேலையின்மை, நாணய மதிப்புச் சரிவு, ஊழல் மற்றும் சுதந்திரமின்மைக்கு எதிராகப் போராடுகிறார்கள். கைதுகள், இணைய முடக்கங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் போராட்டங்கள் பல இடங்களில் தொடர்கின்றன. அங்கே கடந்த 40 மணி நேரமாக இணையம் மொத்தமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் - திரண்டு வந்து மக்கள் போராட்டம்

முந்தைய போராட்டங்களைப் போலல்லாமல், இந்த இயக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் மட்டுமே இல்லை. தொழிலாளர்கள், மாணவர்கள், கடைக்காரர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பங்கேற்கின்றனர். கோஷங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளிலிருந்து அரசியல் அமைப்பை நேரடியாக விமர்சிக்கும் நிலைக்கு மாறியுள்ளன. இதனால் அங்கே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அதோடு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும் கருதப்படுகிறது. இந்த வாரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 18% வரை உயர்ந்து, ஒரு பீப்பாயின் விலை 79 டாலரை தொட்டது, பின்னர் 77 டாலராக குறைந்தது. மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் விலை 75 டாலராக இருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி அதிக ஆபத்துள்ள மண்டலமாக இருப்பதால், கப்பல் காப்பீட்டு நிறுவனங்கள் டேங்கர் கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளன, மேலும் சில கப்பல்கள் தங்கள் வழிகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

எண்ணெய் வர்த்தகத்தில் ஆபத்து இப்போது அதிகமாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டால், ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 120 டாலரை எட்டுவதில் ஆச்சரியமில்லை. ஹார்முஸ் ஜலசந்தி முழுவதுமாக மூடப்பட்டால் அல்லது நீண்ட நேரம் தடை ஏற்பட்டால், கச்சா எண்ணெய் விலை 120-130 டாலரை எட்டும் என்று JP Morgan, Citi மற்றும் Deutsche Bank உள்ளிட்ட பல பெரிய வங்கிகள் மற்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஒருவேளை இடையூறு நீடித்தால், விலை இன்னும் உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்

ஈரான் பதிலடி கொடுத்தால் அல்லது புதிய தாக்குதல்கள் நடந்தால், சந்தை மீண்டும் திங்களன்று திறக்கப்படும்போது விலைகளில் கூர்மையான ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் பங்குச் சந்தைகள் கத்தியின் மேல் நடப்பது போல் மாறும், தங்கம் விலை கண்ணிவெடி போல வெடிக்கும் என்று JP Morgan எச்சரித்துள்ளது.

ஈரான் இஸ்ரேல் போர் காரணமாகவும், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. இந்த போர்களால் பங்கு சந்தைகள் மூச்சு முட்ட தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது.

அமெரிக்காவில் இன்றும் ஸ்பாட் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ் $3,442.09 ஆக 0.3% உயர்ந்தது. இது ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிறகு கண்ட அதிகபட்ச விலையாகும். அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலையும் 0.3% உயர்ந்து $3,461.90 ஆக இருந்தது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹10,075 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹9,235 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹7,600 ஆகவும் உள்ளது. திங்கள் கிழமை மார்க்கெட்டில் இது கடுமையாக உயரும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+