சிலம்பத்தில் அசத்திய மதுரைச் சிறுவன்! அமெரிக்காவின் உலக சாதனைக் குழு சான்றிதழ்!
சென்னை: சிலம்பத்தில் அசத்திய மதுரைச் சிறுவனுக்கு அமெரிக்காவின் உலக சாதனைக் குழு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழர்களின் தற்காப்பு கலைகளில் முதன்மையான கலையாக திகழ்கிறது சிலம்பம். போர்க்கலையாக மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு சிறந்த உடற்பயிற்சி விளையாட்டாகவும் சிலம்பம் அமைந்துள்ளது. சிலம்பம் கற்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்கிற வகையில் 7 வயது முதல் எத்தனை வயது வரையில் வேண்டுமானாலும் கற்கலாம்.

அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த சிறுவன் தனது சிலம்பம் சுற்றும் திறனால் அமெரிக்காவின் உலக சாதனைக் குழு சான்றிதழை பெற்று பெற்றொருக்கும், பிறந்த ஊரான மதுரைக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார். சிலம்பம் சுற்றுவது என்பது தனிக்கலை. நினைத்தவர்கள் எல்லாம் சிலம்பாட்டம் ஆடி விட முடியாது. சிலம்பம் விளையாடும்போது விளையாடுபவர், தன்னுடன் விளையாடுபவர்க்கு தாம் எவ்வாறு கம்பை பயன்படுத்தப்போகிறோம் என்பதைத் தெரியாமல் கம்பை மறைப்பதற்குப் பெயர் பதுக்கல்.

மேல் வீச்சு, கீழ் வீச்சு, உச்சி வெட்டு, முகவாள் வெட்டு, எறி குத்து என சிலம்பாட்டத்தில் பல நெளிவு சுளிவுகளும், சூட்சுமங்களும் உள்ளன. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சிறுவன் கலை இளமணி ஜெ.அதீஸ்ராம் கடந்த 2023 டிசம்பர் 24 அன்று மதுரை, புளியங்குளம், கேரன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுதலில் 90 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்து சாதனை புரிந்தார். இச்சாதனையை அங்கீகரித்து அமெரிக்காவில் உள்ள உலக சாதனைக் குழு (World Record Committe) 28.02.2024 அன்று சான்றிதழ் அளித்துள்ளது.
'தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்ப விளையாட்டில் பெயர் பெற்ற மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஜெ. அதீஸ்ராம் ஸ்கேட்டிங் செய்து கொண்டே, சிலம்பம் சுற்றுதலில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்கேற்று முதல் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications