ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ

முதலில் ஏசி பயன்படுத்துபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, வெப்பநிலையை, மிக குறைவாக வைப்பதுதான்.. பலரும் 16 அல்லது 18 டிகிரியில் ஏசியை வைத்தால் சீக்கிரம் குளிர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.
ஏசி கரண்ட் பில் அதிகமா
ஆனால், உண்மையில் 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் ஏசியை வைப்பதே மின்சாரத்தைச் சேமிக்கச் சிறந்த வழியாகும்.. ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை உயர்த்தும்போதும் சுமார் 6 சதவீத மின்சாரம் சேமிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் ஏசியுடன் சேர்த்து ஒரு சாதாரண ஃபேனையும் குறைந்த வேகத்தில் ஓடவிட்டால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் சீராகப் பரவி சீக்கிரம் அறையைக் குளிர்ச்சியாக்கும்..
அடுத்ததாக, மின் சாதனங்களின் பராமரிப்பு மிக முக்கியமானது. ஏசியில் உள்ள ஏர் ஃபில்டர்களை மாதம் ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம்.. அழுக்கு படிந்த ஃபில்டர்கள் இருந்தால், ஏசி இயந்திரம் ரூமைக் குளிர்விக்க அதிக மின்சாரத்தை இழுக்கும்.
பழைய மாடல் ஃபேன்கள்
அதேபோல பழைய மாடல் ஃபேன்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நவீன பிஎல்டிசி (BLDC) ஃபேன்களைப் பயன்படுத்துவது மின்சார பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும்.. இப்போதைய கோடைக்காலத்தில் பழைய ஃபேன்கள் அதிக வெப்பத்தை வெளியேற்றுவதுடன் அதிக மின்சாரத்தையும் ஈர்க்கக்கூடியவை.
கரண்ட் பில் எகிறாமல் இருக்க இன்னொரு முக்கியமான வழி, தேவையற்ற மின் சாதனங்களை "ஸ்டான்ட்பை" மோடு-ல் வைக்காமல் இருக்கலாம்.. டிவி, கம்ப்யூட்டர், மைக்ரோவேவ் ஓவன் போன்ற சாதனங்களை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகும் பிளக் பாயிண்ட்டில் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டு இருந்தால், அதனால்கூட கலண்ட் பில் எகிறிதும.. இதற்கு "வேம்பயர் பவர்" என்பார்கள். அதேபோல நைட் நேரத்தில் செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுவதையும் தவிர்க்க வேண்டும்..
மின்சார கட்டணம் குறைய டிப்ஸ்
வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் தடிமனான ஸ்கிரீன்களை உபயோகிப்பதன் மூலம் சூரிய வெப்பம் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம்.. இது ரூமின் வெப்பநிலையைக் குறைக்க உதவுவதுடன் ஏசியின் வேலையைச் சுலபமாக்கும்.
மொட்டை மாடியில் வசிப்பவர்கள் வெள்ளை நிற கூலிங் பெயிண்ட் அடிப்பதன் மூலமும் வெப்பத்தைத் தவிர்க்கலாம்.. இதுபோன்ற குட்டி குட்டி மாற்றங்களை உங்கள் அன்றாட வாழ்வில் கொண்டு வருவதன் மூலம், சம்மர் சீசனிலும் கரண்ட் பில் குறித்த கவலையின்றி நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும்..!












Click it and Unblock the Notifications