சமையலறையில் இந்த 3 பொருள் இருக்கா? முதல்ல தூக்கி போடுங்க! இதை கையில் எடுங்க! டாக்டர் சொல்லிட்டாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக ஒரு வீட்டின் சுகாதாரம், சமையலறையிலிருந்துதான் துவங்குகிறது.. எனவே, சமையலறையில் முழுகவனத்தையும் செலுத்த வேண்டியிருக்கிறது. இவைகளையும் தாண்டி நோய்கள் நம்மை தாக்க வாய்ப்புள்ளதாம்.. இதுகுறித்து மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் 3 முக்கிய பொருட்களில் கிச்சனில் கூடுதல் அக்கறை செலுத்தினாலே நோய்களிலிருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்கிறார். அவை என்ன தெரியுமா?

கிச்சனை பராமரிப்பது என்பதே ஒரு சிறந்த கலையாகும். உணவு சுவையைவிட, சமையலறையின் பாதுகாப்பும், சுத்தமும், சுகாதாரமும் அவசியமாகிறது.. நெருப்பில் சமைப்பது, கேஸ் சிலிண்டர், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, இன்டக்க்ஷன் ஸ்டவ் போன்ற மின்சாதனங்கள் என அனைத்திலுமே அதீத கவனம் செலுத்தி சமைக்க வேண்டியிருக்கிறது.

3 toxic kitchen items Plastic Vessels

எனினும்கூட ஒருசில விஷயங்களில் பராமரிப்பு அவசியம் என்கிறார், டாக்டர் சவுரவ் சேத்தி.. அதாவது, ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர்தான் டாக்டர் சவுரப் செதி.

பழைய பிளாஸ்டிக் பாத்திரங்கள்

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில், பழைய பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்.. புதிதாக பிளாஸ்டிக் பாத்திரம் என்றால் பரவாயில்லை, ஆனால், அதுவே நாளடைவில் மங்கி பழையதாகி, அதிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லதல்ல..

அந்த பிளாஸ்டிக்கின் தன்மை சிதைந்துவிடும், மேலும், அதீத வெப்பத்தினால் கரிம வேதிப்பொருளான (BPA) bisphenol A போல ரசாயனங்களை வெளிப்படுத்தலாம்.. இது காய்கள் வழியாக உணவில் கலந்து நாளடைவில் வீக்கம், நச்சுத்தன்மை மற்றும் ஹார்மோன் சீர்குலைவு போன்ற பிரச்சனை வரை ஏற்படுத்தலாம்.

எனவே பிளாஸ்டிக்கை பெருமளவு தவிர்த்துவிட்டு, பாதுகாப்பான பொருட்களையே சமையலறையில் பயன்படுத்த வேண்டும்.

துருபபிடிக்காத எஃகு, சிலிகான்

பிளாஸ்டிக் பாத்திரங்கள் உருகும் என்பதால் நேரடியாக நெருப்பில் வைத்து பயன்படுத்துவதில்லை.. ஆனால், மைக்ரோ அவன் மற்றும் கரண்டிகளை பிளாஸ்டிக்கில்தான் பயன்படுத்துகிறோம். இதனால் மலட்டுத்தன்மை, சர்க்கரைநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சில வகையான புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கும்.

எனவே, பிளாஸ்டிக்குக்கு பதிலாக, துருப்பிடிக்காத எஃகு, சிலிகான், மூங்கில் போன்ற பாதுகாப்பான பொருள்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

காய்கறி வெட்ட உதவும் பலகைகள்

அதேபோல, காய்கறிகளை வெட்ட உதவும் பலகைகளும் பெரும்பாலும் பிளாஸ்டிக்குகளில் ஆனவைதான்.. இவைகளில் காய்களை வெட்டும்போது, உணவுகளில் மைக்ரோ- பிளாஸ்டிக்குகள் வெளியிடப்பட்டு, அது உடலில் சென்று அபாயத்தை தோற்றுவித்துவிடும்.. எனவே, பிளாஸ்டிக் பலகைகளுக்கு பதிலாக, மரத்தினால் செய்யப்பட்ட அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட பலகைகளை பயன்படுத்தலாம்.

(தினமும் இந்த பிளாஸ்டிக் பலகையில் வைத்து காய்கறி வெட்டினாலும், பலகைகளை பலரும் கழுவுவதில்லை.. மறுநாளும் அதே பலகையில் வைத்து காய்கறிகளை வெட்டுவார்கள். எனவே பிளாஸ்டிக்கை தவர்ப்பது நல்லது)

கீறல் விழுந்த நான்ஸ்டிக்

அடுத்ததாக, சீராக இல்லாமல் காணப்படும் நான்-ஸ்டிக் கடாய், நான்ஸ்டிக் பேன்கள் உள்ளிட்ட பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்.. அதிலும் கீறல்கள் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதும், உடலுக்கு தீங்கு தரக்கூடியதே..

இதுபோன்ற பாத்திரத்தில் சமைத்தால், PFAS (perfluoroalkyl மற்றும் polyfluoroalky பொருட்கள் இருக்கலாம்.. அதாவது உணவுப் பொருட்களை ஒட்டாமல் இருக்கவும், பேக்கேஜிங் செய்யவும் பயன்படுத்தப்படும் ரசாயனமாகும்..

புதிய நான்ஸ்டிக் பாத்திரம்

இவை உடலுக்குள் செல்லும்போது, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளை கொண்டுவந்துவிடும்.. எனவே, கீறல் விழுந்த மற்றும்
பூச்சு உரிந்திருந்தால், அந்த பாத்திரம் பாதுகாப்பற்றதாகிவிடும் என்பால், அவைகளை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது" என்கிறார் இரைப்பை குடல் நிபுணர்தான் டாக்டர் சவுரப் சேத்தி.

கீறல் விழுந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும்போது, அதிலுள்ள நச்சுப் பொருட்களும் மனித உடலில் கலக்க வாய்ப்பு உள்ளது.. மேலும், சேதமடைந்த பாத்திரத்தில் சமைக்கும்போது, அந்த துகள்களை உணவில் வெளியிடுமாம்.

புதிய நான்ஸ்டிக் பாத்திரங்கள் பொதுவாக பாதுகாப்பானவை என்றாலும், அதிக வெப்பத்தில் சமைக்கும்போது அதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+