மொதல்ல "மத்திய அமைச்சர்கள்" தடுப்பூசி போட்டுக்கலாமே.. சு. வெங்கடேசன் அதிரடி!

தடுப்பூசி குறித்து எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தடுப்பூசி குறித்த மிக முக்கியமான பிரச்சனையை மதுரை எம்பி வெங்கடேசன் கிளப்பி உள்ளார்.. அத்துடன் அது சம்பந்தமான சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார்..!

கொரோனா தொற்று பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.. எத்தனையோ முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டும், இன்னும் தொற்று பாதிப்பில் உலக அளவில் 2வது இடத்தை அப்படியே தக்க வைத்து கொண்டுள்ளது.. அதனால்தான், தடுப்பூசியை அவசரக்கால பயன்பாட்டுக்கு போடுவதற்கு மத்திய அரசு அனுமதி தந்திருக்கிறது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு சு.வெங்கடேசன் மாற்று கருத்தை முன் வைத்துள்ளார்.. அத்துடன் ஓரிரு கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.. முதலில் அவரது ஃபேஸ்புக் பதிவில் உள்ளதை பார்த்துவிடுவோம்,

அவசியம்

அவசியம்

"தடுப்பூசி அவசரமானது அவசியமானது" என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சரியான மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி அனுமானத்தின் அடிப்படையில் கோவாக்சினுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்திய ஆய்வுக்கட்டமைப்பை நம்பிக்கையையே சிதைப்பதாக உள்ளது.

 வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

ஒரு வாக்சினின் பாதுகாப்பு குறித்து தெளிவான உலக ஆய்வு வரையறை உள்ளது. இந்த அனுமதியும் அங்கீகாரமும் அந்த வரையறையின் படி அமையவில்லை. எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு அனுமதித்துள்ளது? என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கோவாக்சினின் தோல்வியாக மட்டும் முடியாது. ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும்.

தடுப்பூசி

தடுப்பூசி

வெகுசன மக்கள் தடுப்பூசிகளையே புறக்கணிக்கத் துவங்கினால் அதன் விளைவு கொடிதினும் கொடிது. தவறான வாக்சின் அந்த வைரசையே பலம் பொருந்திய வீரியமானதாக மாற்றிவிடக் கூடாது. கூடவே " இப்போதைய புதிய வீரிய வைரசுக்கும் இத்தடுப்பூசி பயன்படும்;110 சதவீத பாதுகாப்பு" என்றெல்லாம் கூச்சலிடுவது இந்திய அறிவியல் உலகையே எள்ளி நகையாடச்செய்கின்றது.

அங்கீகாரம்

அங்கீகாரம்

"தற்சார்பு, இந்திய தயாரிப்பு" சித்தாந்தங்களை தன் அரசியல் ஆயுதமாக எடுக்கும் பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு போலத்தான் இந்த அவசரகதி அங்கீகாரம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், 'இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமே" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+