வாச்சாத்தி.. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை.. 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் தர நீதிபதி ஆணை
சென்னை: வாச்சாத்தி மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கோ அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி வேல்முருகன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிராமத்தையே சூறையாடிய அதிகாரிகள் அங்கிருந்த இளம்பெண்கள் 18 பேரை பலாத்காரம் செய்து சிதைத்தனர்.

ஏழைகளின் சொல் அப்போது அம்பலம் ஏறவில்லை. ஓராண்டு கழித்துதான் வெளி உலக வெளிச்சத்திற்கு வந்தது. நீதிமன்ற கதவை தட்டினர் பாதிக்கப்பட்டவர்கள். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதில் நீதி வென்றது. கடந்த 2011ஆம் ஆண்டு 9 ஆண்டுகள் கழித்து நீதி கிடைத்தது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் அளித்த தீர்ப்பு வாச்சாத்தி மலை கிராம மக்களின் மனங்களில் ஏற்பட்ட ரணங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி வேல்முருகன் உறுதி செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க வேண்டும். மேலும், அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications