வடசென்னை லோக்சபா தொகுதி: 2-வது முறையாக வெல்வாரா மாஜி அமைச்சர் மகன் திமுகவின் கலாநிதி வீராசாமி?
சென்னை: திமுகவின் கோட்டைகளில் ஒன்றான வடசென்னை லோக்சபா தொகுதியை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்க்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி மீண்டும் தக்க வைப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
வடசென்னை தொகுதி அறிமுகம்: வடசென்னை தொகுதியில் மீனவர்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள், நாடார்கள் கணிசமாக உள்ளனர். வடசென்னை லோக்சபா தொகுதியானது ஏராளமான தொழிலாளர்களைக் கொண்ட தொகுதி.

வடசென்னை லோக்சபா தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,84,689; ஆண் வாக்காளர்கள்: 17,24,968; பெண் வாக்காளர்கள்: 7,59,208; 3-ம் பாலினத்தவர்- 513.
வடசென்னை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர் (தனி). இந்த 6 தொகுதிகளிலும் 2021 தேர்தலில் திமுகதான் வென்றது.
வடசென்னை லோக்சபா தொகுதியானது 1957 முதல் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. திமுகவின் முதுபெரும் தலைவர்களான நாஞ்சில் மனோகரன், ஆசைத்தம்பி என்விஎன் சோமு, குப்புசாமி, இடதுசாரித் தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோரை வெற்றி பெற வைத்தது வடசென்னை தொகுதி.
வடசென்னை லோக்சபா தொகுதியில் திமுக 11 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும் அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
டிகேஎஸ் இளங்கோவன் (திமுக) 2,81,055
தா.பாண்டியன் (இ.கம்யூ) 2,61,902
யுவராஜ் தேமுதிக) 66,375
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) 23,350
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
வெங்கடேஷ் பாபு (அதிமுக) 4,06,704
கிரிராஜன் (திமுக) 3,07,000
சாக்கோ (காங்கிரஸ்) 23,751
உ.வாசுகி (23,751)
2019-ம் ஆண்டு திருவள்ளூர் லோக்சபா தொகுதி முடிவுகள்
கலாநிதி வீராசாமி திமுக- 5,90,986
மோகன்ராஜ் தேமுதிக-1,29,468
மவுரியா மநீம- 1,03,167
காளியம்மாள் நாம் தமிழர் 60,515
2024-ம் ஆண்டு களம் காணும் வேட்பாளர்கள்
கலாநிதி வீராசாமி - திமுக
ராயபுரம் மனோ- அதிமுக
பால்கனகராஜ்- பாஜக
அமுதினி - நாம் தமிழர் கட்சி
வடசென்னை நிலவரம்: சென்னையின் ஒரு அங்கம்தான். ஆனால் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாத தொகுதி. மெட்ரோ ரயில் சேவை எட்டி மட்டும் பார்க்கிறது. வடசென்னையில் குடிநீரில் கச்சா எண்ணெய் கலக்கும் விவகாரம் முதன்மையானது. கொடுங்கையூர் குப்பை மேடும் முக்கிய பிரச்சனை. தொழிற்சாலைகளால் ஏற்படும் சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படாத ஒன்றாகவே நீடிக்கிறது. 10 ஆண்டுகளாக வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. தண்டையார்பேட்டையில் ஐஓசிக்கு டேங்கர்களுடன் சரக்கு ரயில்கள் செல்லும் போது சாலைப் போக்குவரத்து முற்றிலும் தடைபடும் நிலைமைதான் நீடிக்கிறது. வடசென்னைக்கு ரூ1,000 கோடி திட்டங்களை ஆளும் திமுக அரசு அறிவித்திருக்கிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்தால்தான் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.
வடசென்னை களநிலவரம்: திமுகவின் நீண்டகால கோட்டை என்பதாலுல் ஆளும் கட்சியாக இருப்பதாலும் வலிமையான கூட்டணி என்பதாலும் திமுகவின் கலாநிதி வீராசாமிக்கு சாதகம். கடந்த முறை வெற்றி பெற்றும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லையே என்கிற ஆதங்கமும் கலாநிதி வீராசாமி மீது இருக்கவே செய்கிறது. அதிமுகவின் ராயபுரம் மனோ, காங்கிரஸ் பிரமுகராக இப்பகுதியில் நீண்டகால அறிமுகம் கொண்டவர். பாஜகவின் பால் கனகராஜ் அறியப்பட்ட வழக்கறிஞர்- ஜாதி வாக்குகளை பெரிதும் நம்புகிறார். மக்கள் பிரச்சனைகளுக்கு போராடக் கூடியவர் சீமான் என்ற அடிப்படையில் நாம் தமிழர் வேட்பாளருக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications