விஜயகாந்தை விடுங்க! கலைஞர் 100 விழாவில் ராஜ்கிரண்! "டென்ஷனான" வடிவேல்! ப்ளூ சட்டை மாறன் பரபரப்பு
சென்னை: கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்ட ராஜ்கிரணை நடிகர் வடிவேலு ஏறிட்டு கூட பார்க்கவில்லை என ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு! சில தினங்களுக்கு முன்பு கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஆறேழு பேர் பயணம் செய்யலாம்.

ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே சோனியா அகர்வால் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே நயன்தாரா அமர வைக்கப்பட்டதால்..அப்செட் ஆனார் அவர்.
அடுத்து வடிவேலு வந்தார். பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமர்வோம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் கடுப்பான வடிவேலு... உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ராஜ்கிரணை ஏறிட்டு கூட பார்க்கவில்லை.
அதன்பிறகு வந்த பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றார். நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் கைத்தட்டல் வாங்க ஒத்திகை பார்த்துவிட்டு வந்தவருக்கு... அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் அதிருப்தி அடைந்தார்.
வடிவேலுவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு அளித்தவர்கள் ராஜ்கிரணும், கேப்டனும். டி.ராஜேந்திரன் என் தங்கை கல்யாணி படத்தில் அறிமுகமாகி அதில் சில நொடிகள் நடித்தார்.
அதன்பிறகு முறைப்படி அவரை அழைத்து காமெடி கேரக்டரும், ஒரு பாடல் காட்சியும் அளித்து உதவியர் ராஜ்கிரண். அடுத்து சின்னக்கவுண்டரில் வாய்ப்பு தந்தார் விஜயகாந்த்.
என் ராசாவின் மனசில், சின்னக்கவுண்டர் படங்களில் ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடியன்கள் இருக்கும்போது இவர் எதற்கு என மற்றவர்கள் கூறியும் 'பரவாயில்லை. திறமைசாலி. வாய்ப்பு அளிக்கலாம்' எனக்கூறி கைதூக்கி விட்டார்கள் ராஜ்கிரணும், கேப்டனும்.
தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார் வடிவேலு. இவ்வாறு எக்ஸ் வலைதளத்தில் ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார். ராஜ்கிரண் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது வடிவேல் என்னிடம் வாய்ப்பை கேட்கவில்லை. நானாக அவருக்கு கொடுத்தேன். அவர் நன்றாக காமெடி பேசி சிரிக்க வைப்பார் என்பதால்தான் என் ராசாவின் மனசிலே படத்தில் வாய்ப்பு கொடுத்தேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சின்னகவுண்டர் படத்தில் கவுண்டமணி, செந்தில் இருந்தாலும் மதுரைக்காரர் என்பதால் வடிவேலுவுக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்தார். மேலும் அந்த ஷூட்டிங் முடிந்து போகும் போது வடிவேலுவுக்கு சில துணிமணிகளையும் விஜயகாந்த் எடுத்துக் கொடுத்திருந்தார் என்கிறார்கள். அப்படிப்பட்ட விஜயகாந்தையே மறந்து கடுமையாக விமர்சித்து திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பேசியிருந்தார். ஆனாலும் விஜயகாந்த் முன்பு வடிவேலுவை யார் திட்டினாலும் அப்படி சொல்லாதீங்க என கேப்டன் வக்காலத்து வாங்குவாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications