"தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்" திடீரென பாடலை பாட தொடங்கிய சேகர்பாபு.. அப்படியே தொடர்ந்த வடிவேலு!
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சேகர்பாபு, தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் என்று பாடலை தொடங்க, அதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு பாடலை பாடி முடித்தார். இதனால் அந்த விழாவில் திமுக தொண்டர்களிடையே கலகலப்பு ஏற்பட்டது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாள் விழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுக இளைஞரணி சார்பாக பல்வேறு பகுதிகளிலும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக அமைச்சர் சேகர்புபாபு தலைமையில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது.

இதில் ஆ.ராசா, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்றார். இதில் நடிகர் வடிவேலு பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இறங்கி மக்களுக்கு பணிகளை செய்ய வந்த பின், அவரின் உருவம், பேச்சு உள்ளிட்ட எதற்கும், சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது.
சினிமாவின் பாணியை அவரது முகத்தில் பார்க்கவே முடியவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே மழை பெய்ய தொடங்கிய நிலையில், தொண்டர்கள் அங்கிருந்து நகராமல் இருந்தனர். விழாவும் தொடர்ந்து நடக்க, அது கொஞ்சம் விரைவாக முடிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் சேகர்பாபு, "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ" என்று வரியை பாடிவிட்டு வடிவேலுவிடம் மைக்கை நீட்டினார்.
இதையடுத்து வடிவேலு, உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், அன்பு குறைவதுண்டோ.. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ.. சிந்தனை செயலும் ஒன்றுபட்டாலே, மாற்றம் காண்பதுண்டோ.. என்று பாடி முடித்தார். அதேபோல் வடிவேலு பேசிய போதும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா பாடலை பாடினார். இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications