சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்கேயும் எப்போதும் ஒரு பி டீம் என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறாரே வைகோ?

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்கள் இன்னும் முன்னேற வேண்டும்..! ம.தி.மு.க. மல்லை. சத்தியா பேச்சு...

    சென்னை: அரசியலில் தாம் எப்போதும் ஏதோ ஒரு கட்சியின் ஒரு பி டீம் என்பதைப் போல வைகோ செயல்படுவது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

    திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ மதிமுகவை தொடங்கி கால் நூற்றாண்டாகிவிட்டது. ஆனால் வைகோவின் மதிமுக ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கிக்கான கட்சியாக மக்கள் ஏற்கவில்லை.

    இதற்கு மாறாக ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு கட்சியை வீழ்த்த மற்றொரு கட்சியின் பி டீமாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு காலந்தோறும் முன்வைக்கப்படுகிறது. திமுகவில் இருந்து வெளியே வந்த வைகோ சுப்பிரமணியன் சுவாமி குறித்து முழுமையான ஒரு ஆய்வுப் பணியை சகாக்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

    சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கூட்டணிக்கு தலைமை.. முதல் முறையாக இறங்கிப் போகும் அதிமுக? சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கூட்டணிக்கு தலைமை.. முதல் முறையாக இறங்கிப் போகும் அதிமுக?

    சு.சுவாமிக்கு ஆதரவு

    சு.சுவாமிக்கு ஆதரவு

    சுப்பிரமணியன் சுவாமியை அரசியலில் இருந்து ஒழிக்கத்தான் இந்த வியூகம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதே சுப்பிரமணியன் சுவாமியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார் வைகோ.

    திமுகவுக்கு தோல்வி

    திமுகவுக்கு தோல்வி

    பின்னர் அதிமுகவுடனும் திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்தார் வைகோ. 2016-ல் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற கால கட்டத்தில் மக்கல் நலக் கூட்டணி மூலம் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்தி பிரசாரம் செய்தார் வைகோ. அதனாலேயே திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

    அணி மாறிய வைகோ

    அணி மாறிய வைகோ

    அதனால் வைகோ அதிமுகவின் பி டீம் என விமர்சிக்கப்பட்டார். முன்னதாக 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக-திமுகவுக்கு எதிராக பாஜக அணியில் வைகோ தீவிரமாக மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்தார். அப்போதும் வைகோவின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    விமர்சனங்களால் வைகோ

    விமர்சனங்களால் வைகோ

    தற்போது ராஜ்யசபா தேர்தலில் வைகோ, திமுக அணியின் சார்பாக எம்.பி.யாக்கப்பட்டுள்ளார். ஆனால் ராஜ்யசபாவில் வைகோவோ, பாஜகவை விமர்சிக்கிறேன் என்கிற சாக்கில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸை வெளுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இப்போதும் பச்சோந்தி போன்ற கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். இப்படித்தான் 25 ஆண்டுகாலமாக ஓவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு அணியின் ஏதோ டீமாக வைகோ விமர்சனத்துக்குள்ளாகியே வருகிறார்.

    English summary
    Soical Activits slammed MDMK General Secretary and Rajyasabha MP Vaiko's stan on B Team of some one party for always.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X