பஸ் எரித்த 3 பேரை விடுதலை செய்த ஆளுநர்.. 7 பேரை விடுவிக்க மறுப்பது ஏன்... வைகோ கேள்வி
Recommended Video

சென்னை: பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரை விடுதலை செய்த ஆளுநர் 7 பேரை விடுவிக்க மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற 7 பேரை விடுதலை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 7 பேரை விடுதலை செய்வது என்று அமைச்சரவையில் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அதிமுகவினர் விடுதலை
ஆனால் ஆளுநர் இன்று வரை முடிவு எடுக்காமல் உள்ளார். இதனிடையே கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 அதிமுகவினரை ஆளுநர் விடுதலை செய்து விட்டார்.

ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய கோரி வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சின்னமலை பகுதியில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மறுப்பு
அப்போது வைகோ பேசுகையில் தமிழகத்திலிருந்து ஆளுநர் வெளியேற வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த ஆளுநர் ஏன் மறுக்கிறார். பஸ்சை எரித்த அதிமுகவினர் 3 பேரை விடுதலை செய்த ஆளுநர் 7 பேரை விடுவிக்க ஏன் மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

யார் பங்கேற்பு
தன் மீது வழக்கு தொடரப்பட்டாலும் அதை சட்டபடி எதிர்கொள்வேன் என வைகோ தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் டிகேஎஸ் இளங்கோவன், மா சுப்பிரமணியன், முத்தரசன், திருமா, தி. வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications