Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்ப்ரைஸ்" தர்றாரா ஸ்டாலின்.. வைகோ அப்படி சொல்லிட்டாரே.. வருதா மேஜர் அறிவிப்பு? கவனிக்கும் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருகிற ஜுன் 3ம் தேதி, மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், திமுக அதற்கு தயாராகி வருகிறது.. இந்நிலையில், அதுகுறித்து, பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அழுத்தமாக தெரிவித்திருந்தன.

ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

Vaiko: Can DMK Government implement total alcohol ban and What will DMK do on Karunanidhis birthday

கன்னியாகுமரி: கடந்த வருடம், கன்னியாகுமரி மாவட்டத்தில், தனியார் கலை கல்லூரி மாணவிகளுடன் திமுக எம்பி கனிமொழி உரையாடினார். அப்போது, கனிமொழியிடம் நிறைய கேள்விகளை மாணவிகள் எழுப்பினர். அதில், ஒரு மாணவி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளதே.. போலீஸ்காரர்களே மது பழக்கத்திற்கு ஆளாகி வருவது வேதனையாக இருக்கிறது.. தமிழகத்தில் மது விற்பனை ஒரேடியாக நிறுத்தப்படுமா? என்று கேட்டார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கனிமொழி, "திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவுமே சொல்லவில்லை.. அதனால், மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாத விஷயம்.. அதற்கு பதிலாக, அந்த கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்..

எதிர்க்கட்சிகள்: தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, மதுபானம் தொடர்பான சில விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது... தமிழக எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து சொல்லும்போது, மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று சொல்லியே ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்.. அதேபோல, புதுச்சேரி மற்றும் தமிழகம் என 2 மாநில திமுகவினரும் கூட்டு சேர்ந்து போலி மதுபானம் விற்பதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

விமர்சனங்கள்: இதுபோன்ற விமர்சனங்கள் திமுக தரப்பில் முன்வைத்து வரும்நிலையில், பாமகவும் தொடர்ந்து மாநில அரசை விமர்சித்து வருகிறது.. சமீபத்தில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு உரிமம் பெற்று மது விருந்து நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்போவதாக பாமக அதிரடியாக அறிவிக்கவும் செய்தது.

Vaiko: Can DMK Government implement total alcohol ban and What will DMK do on Karunanidhis birthday

வைகோ: எனினும், சிறப்பு உரிமம் பெற்று திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்தலாம் என்ற அறிவிப்பை அரசு திரும்ப பெற்றுவிட்டது.. எனினும், நிலைகுலைய வைக்கும் கள்ளச்சாராய உயிர்பலிகள், திமுக அரசின் மீதான விமர்சனத்தை அதிகரித்து வருகின்றன.. அத்துடன், பூரண மதுவிலக்கு தேவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இன்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், நமக்கு பிரத்யேகமாக ஒரு செய்தி கிடைத்துள்ளது.. அதாவது, வருகிற ஜுன்-3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் ஆகும்.. இந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஏதேனும் புதிய அறிவிப்பை அறிவிக்க விரும்புகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.. இது குறித்து, ஓய்வு பெற்ற திமுக ஆதரவு ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்... அப்போது, மதுவிலக்கை அமல்படுத்தலாம், வரலாற்றிலும் பெண்களிடமும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் என்று ஒரு அதிகாரி சொல்லியிருக்கிறார்..

நிதி நெருக்கடி: அதற்கு முதல்வர் ஸ்டாலின், "நிதி நெருக்கடியில் அரசு இருக்கிறது. அதனை மது வருவாய்தான் ஈடுகட்டி வருகிறது" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரி, "அரசு கஜானாவுக்கு வருவாய் வருவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. அதனை முழுமையாக முறைப்படுத்தினால் மது வருவாய் அவசியமற்றதாக இருக்கும்" என்றாராம்.. அதுமட்டுமல்ல, எந்தெந்த வகையில், எந்தெந்த துறையின் மூலம் அரசு வருவாயை பெருக்க முடியும் என்ற புள்ளி விபரங்களையும் அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

இது போன்றே மேலும் பல ஆலோசனைகள் முதல்வருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதில், எதனை முதல்வர் அறிவிக்கப் போகிறார் என்பது ரகசியமாக இருக்கிறதாம்.. அந்தவகையில் விரைவில் மதுவிலக்கு அமலாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படி அமலானால், திமுகவுக்கு கூடுதல் நற்பெயரை அந்த அறிவிப்பு பெற்றுத்தந்து விடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்த நேரத்தில் ஒரு நிகழ்வை, நாம் இங்கே நினைவுகூர்ந்து சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. கடந்த வருடம், முதல்வராக பொறுப்பேற்று, பல்வேறு அதிரடிகளை ஸ்டாலின் செய்து கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில், டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது குறித்த வழக்கமான பாமகவின் அறிக்கைதான் அது.. முதல்வராக பதவியேற்றிருந்த ஸ்டாலினின் கவனத்துக்கு இந்த அறிக்கை சென்றது... அறிக்கையை படித்து பார்த்தார் ஸ்டாலின்..

Vaiko: Can DMK Government implement total alcohol ban and What will DMK do on Karunanidhis birthday

மதுக்கடைகள்: மதுக்கடைகள் இல்லாமலும், அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்பது முதல் சில புள்ளி விவரங்களை டாக்டர் ஐயா, அதில் விலாவரியாக தெரிவித்திருந்தார்.. அரசுக்கு வருமானம் தரக்கூடிய சில டிப்ஸ்களையும் வழங்கியிருந்தார்.. இதையடுத்து, துரைமுருகனிடம் இந்த அறிக்கை பற்றி விவாதித்திருக்கிறார் ஸ்டாலின்.. பிறகு துரைமுருகனே ராமதாஸுக்கு போனை போட்டு பேசியுள்ளார்.. துரைமுருகனும், ராமதாஸும் நல்ல நண்பர்கள் என்பதாலும், அவர்களுக்குள் ஒரு இணக்கமான போக்கு எப்போதுமே இருப்பதாலும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துள்ளனர்..

பிறகு துரைமுருகனிடமிருந்து போனை வாங்கி, முதல்வர் ஸ்டாலினும் ராமதாஸிடம் பேசியுள்ளார். "அய்யா.. அறிக்கையை படிச்சேன்.. நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. மதுக்கடைகளை ஒழிக்கணும்குறதுதான் என் கொள்கையும்.." என்று ஸ்டாலின் சொல்ல, அதற்கு ராமதாஸோ, "கடந்த வருடம் லாக்டவுன் சமயத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி கேட்டிருந்தேன்... இப்ப நீங்க மூடியிருக்கிறது நல்ல விஷயம்... மூடினது மூடின மாதிரியே இருக்கட்டுமே" என்று இன்னொரு கோரிக்கையை வைத்தாராம் ராமதாஸ்.

நன்றி ஐயா: இதற்கு ஸ்டாலின்.. "நன்றி ஐயா.. தொடர்ந்து இதுபோன்ற ஆலோசனைகளை கொடுங்க.. முடிஞ்சவரைக்கும் செயல்படுத்துறோம்" என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பாமகவின் தலைமை நிலையம், ஒரு செய்திக்குறிப்பாகவே அப்போது வெளியிட்டிருந்தது.. ஸ்டாலின் பேசிய விஷயத்தையும் அதில் விரிவாகவே பதிவிட்டிருந்தது.. இப்போது, மதுவிலக்கு விஷயத்தை திமுக அரசு கையில் எடுக்க உள்ளதாக செய்திகள் கசிந்து வருவது, தமிழகத்தையே கவனிக்க வைத்து வருகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+