என் உடம்பு நடுங்கியது.. பேரிடி போல் தலையில் விழுந்துவிட்டது.. முராத் புகாரி மறைவால் கலங்கிய வைகோ!
சென்னை : முராத் புகாரி மறைந்த செய்தி பேரிடி போல் என் தலையில் விழுந்துவிட்டது. எப்படி மறப்பேன் அந்த முகத்தை; அவர் பாசத்தை.. இனி ஒருவரை அப்படிக் காண முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஹோட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி நேற்று காலமானார்.
முராத் புகாரி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், வேதனையைப் பகிர்ந்துள்ளார் வைகோ.
முராத் புகாரி மறைவு காரணமாக 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

உடம்பெல்லாம் நடுங்கியது
மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவுச் செய்தியால் நிலைகுலைந்து போயுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஹோட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேள்விப்பட்டபோது, என் உடம்பெல்லாம் நடுங்கியது. கழகத்தின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர்.

நெஞ்சை விட்டு அகலவில்லை
ஒவ்வொரு ஆண்டும் இசுலாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தன்றும் நண்பகல் உணவைத் தயாரித்துக் கொண்டுவந்து தருவார். அழகான தோற்றம் கொண்டவர். மலர்ந்த முகத்தோடு, மாறாத புன்சிரிப்போடு அவர் உலவுகின்ற காட்சி என் கண்ணை விட்டும், நெஞ்சை விட்டும் அகலவில்லை. நான் எத்தனையோ துக்கங்களைத் தாங்கி இருக்கிறேன்.

பேரிடி விழுந்துவிட்டது
ஆனால் இது பேரிடி போல் என் தலையில் விழுந்துவிட்டது. எப்படி மறப்பேன் அந்த முகத்தை; அவர் பாசத்தை; அவர் காட்டிய எல்லையில்லாத அன்பை. இனி ஒருவரை அப்படிக் காண முடியாது நான். கழகத்தால் மூன்று நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும்.

நொறுங்கிப் போய்விட்டேன்
யாரால் எனக்கு ஆறுதல் சொல்ல முடியும். நான் நொறுங்கிப் போய்விட்டேன். பொங்கி வரும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தோழர்கள் இந்த அறிவிப்பின்படி துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications