தலை சிறந்த நாடாளுமன்ற மேதை ஜெய்பால் ரெட்டி- வைகோ புகழஞ்சலி
Recommended Video

சென்னை: இந்தியாவின் தலைசிறந்த நாடாளுமன்ற மேதை ஜெய்பால் ரெட்டி என மதிமுக பொதுச்செயலர் வைகோவும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்ற மேதைகளில் ஒருவரான ஆந்திரத்தைச் சேர்ந்த என் உயிரான நண்பர் ஜெயபால் ரெட்டி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மாற்றுத் திறனாளியான ஜெயபால் ரெட்டி அவர்கள், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எண்ணற்ற விவாதங்களில் எடுத்து வைத்த கருத்துகள் ஈடு இணையற்றவை.
ஆங்கிலத்தில் அற்புதமாக பேசும் வல்லமை உள்ளவர். திருவாசகம் இசை ஒலி நாடா வெளியீட்டு விழாவுக்கு என் அழைப்பின் பேரில் சென்னையில் வந்து பங்கேற்றுச் சிறப்பித்தார்.
ஹைதராபாத்துக்குச் சென்று அவரது இல்லத்தில் உள்ளவர்களுடைய அன்பைப் பெற்றிருக்கிறேன். அவர் மறைந்த செய்தி கேட்டவுடன், அவரது மூத்த மகன் அரவிந்த் ரெட்டி அவர்களோடு அலைபேசியில் பேசினேன். சாதாரண காய்ச்சல் என்றுதான் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரே நாளில் அவர் உயிர் நீத்தது பேரிடியாய் எங்கள் குடும்பத்தில் விழுந்துவிட்டது என்றார்.
77 வயதான ஜெயபால் ரெட்டி அவர்கள் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கலிங்கப்பட்டி கிராமத்தில் தேசிய கைப்பந்தாட்டப் போட்டியை நான் நடத்தினேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு தொலைக்காட்சிகளில் அந்தப் பந்தயத்தை ஒளிபரப்பச் செய்தார்.
அவருடன் பழகிய நாட்கள் மனதுக்கு மிகவும் ரம்மியமானவை; பசுமையானவை. அவரது மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பேரிழப்பாகும். அவரது துணைவியாருக்கும், அவரது இரண்டு புதல்வர்கள், புதல்விக்கும், குடும்பத்தினருக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை மிகுந்த துக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications