திருமண விழாவில் மணமகன் நண்பருக்கு பளார் விட்ட வைகோ.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
Recommended Video

சென்னை: ஆண்டிபட்டியில் திருமண விழாவில் கலந்துகொணட வைகோ, மணமகனின் நண்பர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கார் ஓட்டுநர் பொன்னாங்கன் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த வைகோ, தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

தாலி கட்டும் வேளையில் மணமகனின் நண்பர்கள் மேடையில் விசில் அடித்தும், ஸ்பிரே அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த ஸ்பிரே, வைகோ மீது படவே அவர் சட்டென கோபமடைந்தார்.
எதிரே இருந்த மணமகனின் நண்பர் கையில் இருந்த வண்ண காகித வெடி டப்பாவை பிடுங்கி, அவரை கடுமையாக தாக்கினார் வைகோ. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், வைகோவை தடுத்து சமாதானம் செய்தனர்.
அப்போதும் கோபம் குறையாத அவர், மேடையில் நின்றிருந்த மணமகனின் நண்பர்களை திட்டினார். தொடர்ந்து மணமகனின் நண்பர்கள் மேடையை விட்டு கீழிறங்கினர். இச்சம்பவம், திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தது.
"தனது நண்பனின் திருமணத்தை கொண்டாடவே அப்படி செய்தனர். அவர்களை அழைத்து அறிவுரை கூறியிருக்கலாம். தாக்குவது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.!" என்றனர் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications