திமுக கூட்டணியில்.. உத்தேச பட்டியலை ரெடி செய்த மதிமுக? போட்டியிட விரும்பும் தொகுதிகள்.. பின்னணி
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோவின் மதிமுக இந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ப தற்போது உத்தேசமாக 16 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிணத்துக்கடவு, பாளையங்கோட்டை, கடையநல்லூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை, மதுரை தெற்கு தொகுதிகளை கேட்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக ஒரு புறமும், அதிமுக பாஜக கூட்டணி ஒருபுறம், விஜய்யின் தவெக ஒரு புறம், நாம் தமிழர் கட்சி ஒருபுறம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சரியாக 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளன.

16 தொகுதிகளை தேர்வு செய்த மதிமுக
அதிமுக பாஜக கூட்டணி இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக தொகுதிப் பங்கீடை நிறைவு செய்ய மும்முரம் காட்டி வருகின்றன. இதேபோல் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் நமக்கு வெற்றி சாதகமாக உள்ள தொகுதிகளை தேர்வு செய்து வருகின்றன.
வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவையெல்லாம் என பார்த்து அதனை திமுகவிடம் கேட்டு பெற திட்டுமிட்டுள்ளன. அதேபோல் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளன. அதன்படி வைகோவின் மதிமுகவும் இந்த முறை 16 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக உத்தேச பட்டியலை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிங்காநல்லூர், பல்லடம் தொகுதிகளை கேட்க
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக இந்த முறை 16 தொகுதிகளில் களமிறங்கும் வகையில் உத்தேச பட்டியலை வைத்து உள்ளதாகவும், இதில் சிங்காநல்லூர் தொகுதி, பல்லடம் அல்லது கிணத்துக்கடவு ஆகிய 3இல் ஒன்றில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மதிமுகவின் அர்ஜுன் ராஜ் இந்த தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கடலூர் அல்லது புவனகிரி தொகுதியிலும் மதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதி கிடைத்தால் மதிமுக பொருளாளராக இருக்கக் கூடிய செந்தில் அதியமான் இங்கு போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பாளையங்கோட்டை, கடையநல்லூர் தொகுதி
கடந்த முறை வெற்றி பெற்ற மதுரை தெற்கு தொகுதியினையும் மீண்டும் திமுக கூட்டணியிடம் இருந்து கேட்டு பெற முடிவு செய்துள்ளதாம்.. கடையநல்லூர் தொகுதியை கேட்டு அதில் தி.மு ராஜேந்திரனை நிற்க வைக்கவும், நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் நிஜாமுக்காக கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதியினை டாக்டர் ரொக்கையாவிற்காக கேட்க இருப்பதாகவும், விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியில் முன்னாள் எம்பி சிப்பிபாறை ரவிச்சந்திரனை வேட்பாளராக நிறுத்தவும் மதிமுக முடிவு செய்துள்ளது. இதேபோன்று கடந்த முறை வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதியினையும் திமுகவிடம் கேட்க விருப்பம் தெரிவித்து இருக்கிறது.
கோவில்பட்டி, சீர்காழியை கேட்கவும் முடிவு
வைகோவின் சொந்த தொகுதியான கோவில்பட்டி தொகுதியில் ஆர் ரமேஷை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும், முடக்குறிச்சி தொகுதியில் செந்தில் நாதனும், தனித்தொகுதியான சீர்காழியை கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் மற்றும் அரியனூர் தொகுதியினை இந்த முறை கேட்க வேண்டாம் என்று மதிமுக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படியாக மொத்தம் 16 தொகுதிகளை திமுகவிடம் இருந்து கேட்டு பெற மதிமுக முடிவு செய்துள்ளதாம். பேச்சுவார்த்தையின் போது எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ அதற்கு ஏற்ப தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்றும், வரும் 21 ஆம் தேதி பேச்சுவார்த்தையினை திமுக தொடங்கும் என்பதால் அன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும், அதற்கு ஏற்ப வேட்பாளர்களை நிறுத்த மதிமுக முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
-
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்!












Click it and Unblock the Notifications