புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால்.. திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.. விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ!
சென்னை: புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாலும், ஏற்கனவே இருப்பவர்களாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். யாருடன் யார் கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஆதரவு திமுக கூட்டணிக்கு இருப்பதாக கூறிய வைகோ, திமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மது ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனவரி 2 முதல் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி நடைபயணம் மேற்கொள்கிறார். இதனை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வைகோ அழைப்பிதழை வழங்கினார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், ஸ்டாலின் - வைகோ சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதாக உறுதி செய்தார். இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும்.
திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதனை தொடக்க காலம் முதலே நான் சொல்லி வருகிறேன். யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் சரி.. யார் எத்தகைய அறைகூவல்களை ஏவினாலும் சரி.. மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கே ஆதரவு இருக்கிறது. காலை உணவு திட்டம், விடியல் பயணத் திட்டம் என்று திமுக புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
திருவண்ணாமலையில் திமுக நடத்திய இளைஞரணி மாநாடு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் ஜூனியர் உலகக்கோப்பையை நாள் தவறாமல் சென்று பார்த்தேன். அதனால் திமுக மீதான விமர்சனங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள், ஏற்கனவே விமர்சிப்பவர்களால் திமுகவை வீழ்த்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications