Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதிமுக இரண்டாக பிளவுபடுகிறதா? துரை வைகோ எதிர்ப்பாளர்களை திமுக அரவணைக்குமா? உதயமாகுமா புதிய கட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகோ எம்பி தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் 'எங்கே செல்லும் இந்த பாதை' என்கிற நிலைமையாகத்தான் உருவெடுத்து நிற்கிறது.

திமுகவின் ஆகச் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக திகழ்ந்த 2-ம் கட்ட தலைவர் வைகோ. ஆனால் கருணாநிதிக்கு பின்னர் வைகோதான் திமுக தலைமை ஏற்பார் என்கிற கற்பிதம் உருவாக்கப்பட்டதுதான் பிழையாகிப் போனது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஒரு முடிவு எடுக்க அதற்கு நேர் எதிராக வைகோ நிலைப்பாடுகளை எடுக்க பிரச்சனை பெரிதானது.

Vaikos MDMK heading for a split? Seniors to join hands with DMK?

திமுகவில் கருணாநிதிக்குப் பின்னர் அவரது மகன் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக மையம் கொண்ட 1990களின் தொடக்கம். இதனை ஏற்கவே முடியாது என முட்டி மோதிப் பார்த்து தம்மை முன்னிறுத்த போராடினார் வைகோ. காலம் வைகோவை திமுகவில் இருந்து பிரித்தது. கருணாநிதியை கொல்ல புலிகளுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டினார் என்ற கொலைப்பழி சுமந்து திமுகவில் இருந்து துரத்தப்பட்டார் வைகோ.

திமுகவில் இருந்து வைகோ தூக்கி எறியப்பட்டது சாதாரண ஒரு நிகழ்வாகவே தொடக்கத்தில் இருந்தது.. ஆனால் வைகோவுக்காக இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி என எண்ணற்றோர் தீக்குளித்தே மாண்டு போயினர்.. வைகோவின் பின்னால் திமுகவின் மூத்த மாவட்ட செயலாளர்கள் அணி வகுத்தனர். திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கணிசமானோர் வைகோவை தலைவராக ஏற்றனர். இதனால் திமுக 2-வது முறையாக செங்குத்து பிளவை எதிர்கொண்டது. திமுகவின் கொடி, அறிவாலயத்தை காக்க வைகோவுடன் கருணாநிதி போராடியாக வேண்டிய நிலை உருவானத. இதன் விளைவாக உருவெடுத்த இயக்கம், பிறப்பெடுத்த இயக்கம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். ஒற்றை வரியில் சொல்வதானால் திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் உருவாகக் கூடாது என்பதை கடுமையாக எதிர்த்து பிறந்த இயக்கம் மதிமுக.

ஆனால் காலம் செய்த கோலம்தான் எத்தனை எத்தனை?

Vaikos MDMK heading for a split? Seniors to join hands with DMK?

இந்த கால்நூற்றாண்டு கால சரித்திரம் பழங்கதையாக இருக்கட்டும்.. இப்போதைய மதிமுக நிலைமைதான் என்ன? எந்த ஸ்டாலினை எதிர்த்து தனிக்கட்சியை வைகோ தொடங்கினாரோ அதே ஸ்டாலின் தயவால் இப்போது ராஜ்யசபா எம்பியாகி இருக்கிறார் அதே வைகோ. மதிமுகவின் இன்றைய எம்.எல்.ஏக்கள், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். மதிமுக என்பது பெயரளவில்..நடைமுறையில் திமுகவின் ஒரு அங்கம்..

இதை எல்லாம் சகித்துக் கொண்ட மதிமுகவின் மூத்தவர்கள், வாரிசு அரசியலே கூடாது என வானை பிளக்கக் கர்ஜித்த வைகோ தன் வாரிசு துரைவைகோவை கட்சியில் ஜால்ஜாப்பு சொல்லி தமக்கு அடுத்த நிலை தலைவராக திணித்ததைத்தான் ஜீரணம் செய்ய முடியாமல் கொந்தளித்துப் போய் கிடக்கிறார்கள்.. இதனால் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிராக பகிரங்க கண்டனக் குரல் எழுப்பினர். அன்று வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ இன்று வாரிசு அரசியலை திணிக்கிற போது, எதற்கு இந்த இயக்கம்? பேசாமல் திமுகவுக்கே போய்விடலாம் என்பதுதான் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி போன்ற வலதுகரங்களின் கருத்து. மதிமுகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் எதுவும் இல்லை. பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடிய ஒரு கட்சி அவ்வளவுதான். அது தனித்து இருந்தாலும் திமுகவுக்குள் ஐக்கியமானாலும் ஒன்றுதான் என்கின்றனர் அதிருப்தியாளர்கள்.

இப்போதைக்கும் மதிமுக 2 ஆக பிளவுபட்டு தனிக் கட்சி உதயமாகக் கூடிய சாத்தியம் இருக்கிறது; அதேநேரத்தில் திமுவுக்கு போகலாம் என அதிருப்தியாளர்கள் விரும்பினாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புவாரா? அனுமதிப்பாரா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

இப்போதைய நிலையில் எங்கே செல்லும் இந்த பாதை என்பதுதான் மதிமுகவின் அந்தோ பரிதாப நிலை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+