இடைத்தேர்தல் ரிசல்ட்.. தவெகவை உச்சிமுகர்ந்து வாழ்த்திய வைகோ, துரை வைகோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசின் மீதான நம்பிக்கையை மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்கள் வெளிப்படுத்தி உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்கள் ஜனநாயகத்தை வெற்றி பெற வைத்துள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று மதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தேர்தலுக்குப் பிறகு வைகோ, தவெகவுக்கு ஆதரவு அளித்தார். உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற 2 எம்.எல்.ஏக்களும் திமுகவில் இணைந்தனர்.

Vaiko Says Maduranthakam and Dharapuram Voters Have Reaffirmed Their Confidence in TVK Government

எனினும், தொடர்ந்து, தவெகவுக்கு ஆதரவு அளித்து வருகிறது மதிமுக. தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியிலும் மதிமுக இணைந்தது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மதிமுகவினரும் தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் பணி ஆற்றினர். இந்நிலையில், தவெக 2 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளதை வைகோ, துரை வைகோ வரவேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர். வாகை சூடிய அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வெற்றி கழகத் தலைவர், ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கையை இரு தொகுதிகளிலும் வாக்காளப் பெருமக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோ வெளியிட்டுள்ள பதிவில், "ஊழல் வேண்டாம், வன்மம் வேண்டாம், ஆபாசம் வேண்டாம், அவதூறும் வேண்டாம் என்று பணநாயகத்தை நிராகரித்து, ஜனநாயகத்தை வெற்றி பெற வைத்திருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திமுக சார்பில் என் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வெற்றிக்கு உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தவெக, மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி பெற்ற இரு தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பொதுவாழ்வில் நம் வலிமை கூடும் போதெல்லாம் மக்கள் முன் பணிவும், மக்கள் பணியில் துணிவும் வரவேண்டும் என்பதற்கு நூறு விழுக்காடு உதாரணமாக விளங்கும் மாண்புமிகு முதல்வர் அன்புச் சகோதரர் ச. ஜோசப் விஜய்யின் கரங்களைப் பற்றி அன்பு பாராட்டுகிறேன்; உங்கள் வெற்றி தொடரட்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+