உங்க அண்ணன் தான் வைகோ... அவரை நீங்கதான் அரவணைக்கனும்... ஸ்டாலினுக்கு துரை வைகோ உருக்கமான கோரிக்கை..!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்துக்கொள்ள வேண்டும் என உருக்கமான கோரிக்கை விடுத்திருக்கிறார் துரை வைகோ.
சென்னையில் நடைபெற்ற மதிமுக முப்பெரும் விழாவுக்கு தலைமை தாங்கி பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், வைகோ பிறந்தநாளை ஆண்டுதோறும் தமிழர் தலை நிமிர்வு நாளாக கொண்டாட வேண்டும் என மதிமுகவினருக்கு துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

முப்பெரும் விழா
மதிமுக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முப்பெரும் விழா இந்தாண்டு சென்னையில் நடைபெற்றது. ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே கூறியிருந்தது போல், மதிமுக முப்பெரும் விழாவுக்கு வைகோவின் மகன் துரை வைகோ தான் தலைமை தாங்கியிருந்தார். உடல்நிலை கருதி வைகோ பங்கேற்க வாய்ப்பில்லை என ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம். அதேபோல் தான் நடந்தும் உள்ளது.

வைகோ பிறந்தநாள்
வைகோவின் பிறந்தநாளான இன்று, அதாவது செப்டம்பர் 22-ம் தேதியை தமிழர் தலை நிமிர்வு நாளாக இனி வருடந்தோறும் கட்சியினர் கொண்டாட வேண்டும் என துரை வைகோ கேட்டுக்கொண்டார். மேலும், திமுகவும், மதிமுகவும் வேறுவேறல்ல என்றும் வைகோவை பொறுத்தவரை ஸ்டாலினுக்கு அண்ணன் தான் எனவும் தெரிவித்தார். உங்கள் அண்ணன் வைகோவை நீங்க தான் அரவணைக்கனும் என உருக்கமான கோரிக்கை ஒன்றையும் முதல்வருக்கு முன் வைத்தார் துரை.

சிறப்பு விருந்தினர்
மதிமுக முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினை தான் சிறப்பு விருந்தினராக அழைப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் அவருக்கு இருந்த பரபரப்பான பணிகள் காரணமாக சிறப்பு விருந்தினர் விவகாரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மதிமுகவினர்
வைகோ இடத்தில் துரை வைகோ அமர்ந்தது விழாவில் கலந்துகொண்ட மதிமுகவினரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தனக்கு அறிமுகமானவர்கள் அறிமுகமில்லாதவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் அன்பொழுக பேசி அவர்களுடன் புகைப்படம் எடுத்து உடல்நலம் விசாரித்தார் துரை வைகோ. இது மதிமுக நிர்வாகிகளையும், வைகோவின் விசுவாசிகளையும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது. இதனிடையே விரைவில் நீங்கள் கட்சியில் முக்கியப் பொறுப்புக்கு வர வேண்டும் என முப்பெரும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் பலரும் துரை வைகோவிடம் வலியுறுத்திச் சென்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications