அதிமுகவுடன் கூட்டணி வைத்து நாசமாக்கிவிட்டேன் - மதிமுக நிர்வாகிகளிடம் குமுறிய வைகோ
ஈரோடு: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகின்றனர். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. மதிமுக வைகோ, அதிமுகவுடன் கூட்டணி சேர தவறான முடிவு எடுத்து என் நம்பத்தன்மையை நானே நாசமாக்கிக் கொண்டேன் என்று உடைத்து பேசியுள்ளார் [Vaiko spoke about ADMK].
ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "நான் கடந்த காலங்களில் சில பிழைகளை செய்துள்ளேன். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். என் நம்பகத்தன்மையை நானே நாசமாக்கிக் கொண்டேன். என் அரசியல் வாழ்க்கை நம்பகத்தன்மை சுக்கு நூறாகியது. அதிமுக பொதுச் செயலாளர் 19 மாதம் சிறையில் அடைத்தாரோ, அதே அதிமுகவுடன் உடன்பாடு வைத்தது மன்னிக்க முடியாத தவறான முடிவு.

அதிமுகவுடன் கூட்டணி தவறான முடிவு
அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க கூடாது. அப்போது அந்த முடிவு எடுக்க காரணமாக இருந்த தலைமை நிர்வாகிகள் இப்போது நம்மிடம் இருந்து பிரிந்துவிட்டனர். நாம் திமுகவுடன் கூட்டணி வைத்தால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்றனர். குமுதம் பத்திரிகை 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெல்ல போகிறது என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டனர்.
கட்சிக்கு புத்துயிர்
அவர்களுடன் கூட்டணி வைத்தால் 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்தில் பிரவேசிக்கலாம்.. கட்சிக்கு புத்துயிர் கொடுக்கலாம்.. கட்சியை வளர்க்கலாம்.. இந்த வாய்ப்பை விட்டால் நமக்கு எதிர்காலமே கிடையாது என்று ஆணித்தனமாக கூறினார்கள். திருச்சி திமுக மாநாட்டில் பேச குறிப்புகள், பயணப் பெட்டி உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்துவிட்டேன்.
இமயம் போல நிமர்ந்திருக்க வேண்டும்
புறப்பட தயாரானபோது, எங்கள் முக்கிய தலைவர்கள் 10 நிமிடம் பேச வேண்டுமென இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தனர். இமயம் போல எங்கோ நிமிர்ந்திருக்க வேண்டிய நாம், படு பாதாளத்திற்கு சென்றோம். இந்த முடிவு அதனால் ஏற்பட்டது. மீண்டும் அப்படி ஒரு விமர்சனத்திற்கு போக கூடாது. 1994 வெளியேற்றப்பட்ட பிறகு நடிகர்களுக்கு வரும் கூட்டத்தை விட எனக்கு பல மடங்கு வந்தது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
ஆற்று வெள்ளம் வந்து வடிவது போல, தோல்விகளுக்கு பிறகு திரும்பி வடிந்து சென்றுவிட்டது. இந்த தேர்தல் அக்னி பரீட்சை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அப்படிதான் கடந்து செல்ல வேண்டும். எல்லா கட்சிகளிலும் இடங்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள். நாம் திமுகவுடன் பயணிக்க முடிவு எடுத்த பிறகு, ஒரு இடத்தில் கூட குந்தகம் ஏற்படுமளவுக்கு திமுகவை ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications