தூத்துக்குடியைப் பத்தி பேசவே படாது.. கப்சிப் ஆக்கிய வைகோ.. காரணம் கனிமொழி!
Recommended Video

சென்னை: கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடவிருப்பது உறுதியாகி விட்டதால் அந்தத் தொகுதியை கேட்க வேண்டாம் என்று கூறி விட்டாராம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 2 தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால் ஒரு தொகுதி மட்டுமே என்பது திமுகவின் நிலைப்பாடு. வேண்டுமானால் ராஜ்யசபா தருகிறோம் என்று கூறி விட்டது திமுக.
மதிமுக கேட்கும் மற்றொரு லோக்சபா தொகுதிக்கு பதில் வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்ப உள்ளாராம் ஸ்டாலின். நம்பமுடியவில்லையா.. ஒன் இந்தியா தமிழுக்கும் அப்படித்தான் இருந்தது, வேறு என்ன செய்வது சொல்லிய நபர் நம்பத்தகுந்தவர் ஆயிற்றே.

மத்தியில் சரியான ஆள் இல்லை
மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க சரியான ஆள் வைகோ என்பது திமுகவின் எண்ணமாம். மேலும், கருணாநிதியுடன் அவர் பயணித்தது உள்ளிட்ட சில பல கணக்குகளை போட்டு வைகோவை மாநிலங்களவை உறுப்பினராக்கும் முடிவை எடுத்துள்ளாராம் ஸ்டாலின்.

தூத்துக்குடியில் கனிமொழி
கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிகிறது. கனிமொழி தூத்துக்குடியில் களம் காண உள்ளார். தூத்துக்குடியை ஆரம்பத்தில் கேட்டதாம் மதிமுக. காரணம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததால் அந்த தொகுதியில் வைகோவிற்கு செல்வாக்கு அதிகரித்தது தான்.

வைகோவின் தடை
இதனிடையே கனிமொழி போட்டியிட உள்ளதை அறிந்த வைகோ, தூத்துக்குடியை பற்றி வாய் திறக்க வேண்டாம் என கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது.

கனிமொழியின் நெகிழ்ச்சி
இதனால் நெகிழ்ந்து போன கனிமொழி வைகோவுக்கு தான் வகிக்கும் பதவியை கொடுக்கலாம் என யோசனை கூறினார். கூட்டி கழித்து பார்த்து ஸ்டாலினும் அந்த முடிவுக்கே வந்துவிட்டார் எனக் கூறுகிறார் முன்னணி நிர்வாகி ஒருவர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications